ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி பிறந்த தின பதிவு
ஏஞ்சலினா ஜோலி அமெரிக்க நடிகையும் இயக்குனரும் ஆவார். இவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார். இவர் இதுவரை மூன்று கோல்டன் குளோப் விருதுகளையும், இரண்டு ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகளையும், ஒரு அகாதமி விருதையும் வென்றிருக்கிறார். உலகெங்கிலும் மனிதாபிமான நோக்கத்துடனான நற்பணிகளை ஊக்குவிக்கும் ஜோலி, அகதிகளுக்கான ஐநா ஆணையம் மூலம் அகதிகளுடன் பணியாற்றி கவனத்தை ஈர்த்திருக்கிறார். உலகின் மிகவும் அழகான பெண்களில் ஒருவராக மேற்கோள் காட்டப்படும் இவர், திரைக்கு வெளியிலும் பரவலாக செய்திகளில் இடம்பிடிக்கிறார்.
1982 ஆம் ஆண்டில் வெளிவந்த லுக்கிங் டூ கெட் அவுட் என்கிற திரைப்படத்தில் குழந்தையாக, தனது அப்பா ஜோன் வோய்ட் உடன் தோன்றியதன் மூலம் அவரது திரை அறிமுகம் நிகழ்ந்தாலும், குறைந்த முதலீட்டில் தயாரான சைபோர்க் 2 (1993) திரைப்படத்தின் மூலம் தான் அவரது பிரதான நடிப்பு வாழ்க்கை...
