Sunday, April 19
Shadow

Tag: #கதிர்

கதிர் திரை விமர்சனம் (4/5)

Latest News, Review
தினேஷ் பழனிவேல் இயக்கத்தில் வெங்கடேஷ் அப்பாத்துரை நடிப்பில் உருவாக்கியுள்ள கதிர் படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். இன்ஜினியரிங் படித்துவிட்டு ஊரில் வேலை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ வெங்கடேஷ் சென்னையில் தனது நண்பர் ரூமில் தங்கி வேலை தேடுகிறார். ஆங்கிலத்தில் தடுமாறும் இவர் வேலை கிடைக்காமல், தண்ணியடித்துவிட்டு சுற்றித் திரிகிறார். பின்பு இவர் தங்கி இருக்கும் வீட்டு ஓனர் ஆக வரும் ரஜினி சாண்டி ஹீரோவிற்கு புத்திமதி சொல்லி திருத்துகிறார். பின்பு ஹீரோ வெங்கடேஷ்க்கு வேலை கிடைத்ததா? அடுத்து அவர் என்ன செய்தார்? என்பதே கதிர் படத்தின் ஒன்லைன். தற்போது இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றித்திரியும் பல இளைஞர்கள் ஹீரோ கதாபாத்திரத்துடன் தங்களை ஒன்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு அவர் செய்யும் செயல்கள் அவ்வளவு எதார்த்தமாக உள்ளது. ஹீரோவின் நண்பர்களாக வரும் ஒவ்வொரு வரும் சிறப்பாகவே நட...
விக்ரம் வேதா நடிகருக்கு கை கொடுத்த கவுதம் மேனன்

விக்ரம் வேதா நடிகருக்கு கை கொடுத்த கவுதம் மேனன்

Latest News, Top Highlights
கதிர் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே நாயகியாகவும் படம் ‘சத்ரு’. இந்தப் படத்தை ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்’ சார்பில் ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இதில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் ஹீரோவாக நடித்த ‘லகுபரன்’ இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைக்கும் படத்தின் பாடல்களை கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எழுதுகிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ‘நவீன் நஞ்சுண்டான்’. “இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதை. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருவதாக இயக்குநர் நவீன் நஞ்சுண்டான் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் கவுதம்மேனன் வெளியிட்டிருக்கி...