போஸ்டரின் மூலம் சர்ச்சையை கிளப்பிய ரஜினி படம்
ரஜினியின் தீவிர ரசிகரான கபாலி செல்வா இயக்கத்தில் உருவாகியிருக்கும் '12-12-1950' படத்தின் போஸ்டரால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
ரஜினியின் தீவிர ரசிகரான கபாலி செல்வா இயக்கி நடித்திருக்கும் '12-12-1950' படம் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
ஒரு படத்தின் வெற்றிக்கு சர்ச்சை மிக அவசியம் என கருதப்படும் இந்த காலத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் பற்றிய இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான சில போஸ்டர்களும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜெயில் 'பரோல்' என்பதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இப்படத்தின் சமீபத்தைய போஸ்டரில் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றியும், பரோல் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் 'பரோல்' என்ற வார்த்தையை விரும்பாத சிலர் இப்பட தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி மிரட்டியுள்ளனர்.
அதேபோல், சில தினங்களுக்கு முன்பு இப்படத்தி...
