செய்த சத்தியத்தை காப்பாற்றினார் சுஷாந்த் சிங் ராஜ்புத்!
பாலிவுட்டில் தன்னுடைய முதல் படமான கை போ சே- வில் உதவிய முகேஷ் சாப்ரவிற்க்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றியுள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
முகேஷ் சப்ரா மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் இருவருக்கும் தில் பேச்சரா வெறும் படம் மட்டுமல்ல, அதையும் தாண்டி நட்பு மற்றும் விசுவாசத்திற்கான சான்று. முகேஷ் சப்ரா சுஷாந்த் சிங் உடைய ஒரு நல்ல நண்பரும் கூட, இவர் முதன் முதலில் சுஷாந்த் சிங்கை கை போ சே என்ற படத்திற்காக தேர்வு செய்து அவருக்கு பாலிவுட்டில் முதல் படத்தை கொடுத்தார். அதில் முகேஷ் சப்ரா காஸ்டிங் டைரக்டராக இருந்தார். அதற்கு கைமாறாக சுஷாந்த் சிங், முகேஷ் சாப்ரா முதன்முதலில் இயக்குனராக அறிமுகமாகும் பாலிவுட் படமான தில் பேச்சராவில் நடித்துக் கொடுத்தார்.
இதைப் பற்றி இயக்குனர் முகேஷ் சாப்ரா கூறியுள்ளதாவது:
நான் ஒரு நாள் இயக்குனராகி என்னுடைய படத்தை இயக்கவேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருந்ததை சு...
