கோமாளி படத்தை வெற்றி பெற செய்தவர்களுக்கு நன்றி…!
டாக்டர் ஐசரி.கே.கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு இந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடித்த எல்.கே.ஜி.படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஜெயம் ரவி காஜல் அகர்வால் நடித்த கோமாளி படமும் மிகப் பெரிய வணிக வெற்றியை ஈட்டியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, இந்த படம் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படம் வெற்றி பெற்றதற்கு டாக்டர் ஐசரி கணேசன் சாரே முக்கிய காரணம். படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் என்பது அனைவர்க்கும் தெரியும். எனக்கும் அவர் லிமிட்டெட் எடிசன் வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இத்போன்று பல நல்ல விஷயங்களை அவர்...
