Friday, April 17
Shadow

Tag: #சாய் பல்லவி

காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி

காதலை ஏற்க மறுத்த சாய் பல்லவி

Latest News, Top Highlights
மலையாளத்தில் வசூலை குவித்த ‘பிரேமம்’ படத்தில் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வருகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அடுத்ததாக தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், செல்வராகவன் இயக்கும் சூர்யாவின் 36-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். சூர்யா படத்தில் நடிப்பது குறித்து சாய்பல்லவி பேசும் போது, “சிறு வயதில் இருந்தே நடனத்தில் எனக்கு விருப்பம் அதிகம். படித்துக் கொண்டே நடனம் கற்றுக்கொண்டேன். பின்னர் சினிமாவில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் எனது தந்தைக்கு நான் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லை. எனது சினிமா வாழ்க்கைக்கு அவரே வில்லனாக இருந்தார். என்னை மருத்துவம் படிக்க ஜார்ஜியாவுக்கும் அனுப்பி விட்டார். இந்நிலையில் தான், பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்...
தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

தனது நீண்டநாள் நண்பருடன் மீண்டும் இணைந்த தனுஷ்

Latest News, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை', கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா' என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

Latest News, Top Highlights
செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் செல்வராகவன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் செல்வராகவன், சிம்புவை வைத்து அவர் இயக்கவிருந்த கான் படத்தையே சூர்யாவை வைத்து இயக்குவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அது வேற கதை, அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. படக்குழு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று...