என்ஜிகே திரை விமர்சனம் Rank 3.5/5
தமிழ் சினிமாவில் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த படம் முதல் முறையாக இணையும் சூர்யா செல்வராகவன் அதோடு சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம் அவருக்கு மட்டும் இல்லை இயக்குனருக்கும் இது முதல் முறை ஆகவே படத்தின் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் மிகுந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட ஒரு படம்
இப்படத்தின் கதையை பார்க்கலாம்.
சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர்.
அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார்.
அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை.
சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி விடுவார், அப்படி அவர் பக்கம் எந்த குறையும் சொல்ல ம...