Tuesday, February 11
Shadow

சிம்பு படத்தில் நடிக்கும் சூர்யா?

செல்வராகவன் தற்போது சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை முடித்த பிறகு சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் செல்வராகவன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் சூர்யா ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி இரண்டாவது பாதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் செல்வராகவன், சிம்புவை வைத்து அவர் இயக்கவிருந்த கான் படத்தையே சூர்யாவை வைத்து இயக்குவதாக கோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அது வேற கதை, அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

படக்குழு இதுகுறித்து விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply