
வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவியும், வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும் நடிக்கிறார்கள். கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
மாரி படத்தை தொடர்ந்து இந்த பாகத்திற்கும் அனிருத்தே இசைமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாரி-2 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
