சூர்யா நடிக்கும் சூரரை போற்று படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…!
நடிகர் சூர்யா "காப்பான்" படத்தை அடுத்து "இறுதி சுற்று" பட இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் "சூரரை போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியதாக அபர்ணா முரளி நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் 2D Entertainment நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஜாக்கி ஷெராப் ,மோகன் பாபு ,கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்த படம் ஜி .ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கிறது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஆகஸ்ட் 14 ந் தேதி முடிவடைகிறது. மேலும் செப்டம்பர் 1 நடிகை ஊர்வசி இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாம்....

