தயாரிப்பாளர் தனஞ்செயன் பிறந்த தின பதிவு
தயாரிப்பாளர் தனஞ்செயன், பிரைட் ஆப் தமிழ் சினிமா என்ற பெயரில் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்துக்கு இந்திய அரசாங்கம் தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, பல்வேறு சினிமா பிரமுகர்களும் தனஞ்செயனின் இந்த புத்தகத்தை பாராட்டி பேசி வருகின்றனர். இந்நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த தனஞ்செயன், தான் எழுதிய ‘பிரைட் ஆப் தமிழ் சினிமா’ புத்தகத்தை அவரிடம் கொடுத்தார். புத்தகத்தை இன்முகத்துடன் பெற்றுக்கொண்ட ரஜினி, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், பாராட்டு மழையும் பொழிந்திருக்கிறார். தான் எழுதிய புத்தகத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து பாராட்டு கிடைத்தது தனஞ்செயனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனஞ்செயன், யு.டி.வி. நிறுவனத்தின் தமிழக நிர்வாகி பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார். அதுதவிர, ‘பாஃப்டா’ என்ற திரைப்பட கல்வி அகாடமி ஒன்றையு...
