Tuesday, April 28
Shadow

Tag: திரை

பெட்ரோமாக்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை தமன்னா, சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். நடிகை நயன்தாராவை தொடர்ந்து, தமன்னாவும் தற்போது ஹீரோ அல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். தமன்னா சோலோவாக நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் படம் 'அனந்தோ பிரம்மா' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமாகும். தெலுங்கு வெர்சனை போலவே தமிழிலும் பெட்ரோமாக்ஸ் படம் காமெடி சீன்கள் கொண்ட படமாக உருவாக்கியுள்ளது. தற்போது முன்னணி காமெடியனாக உருவாகி உள்ள யோகி பாபுவின் காமெடியும் இந்த படத்தில் சிறப்பாக உள்ளது. இந்த படம் பேய் படம் என்றாலும், குழந்தைகள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின...

பப்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
மிகவும் சீரியஸ் படங்களாக பார்த்து வந்த நம்ம தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக மிகவும் யூத்தான ஒரு கதைக்களத்தோடு வெளியாகி உள்ளது "பப்பி". இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். அறிமுக இயக்குனர் நட்டு தேவ். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை வருண் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவரின் யதார்த்தமான ஒரு யூத்துக்கு உண்டான துள்ளலோடு சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர் கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டி சென்றவர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு என்றே சொல்ல வேண்டும். அவர் கிட்ட தட்ட அனைத்து படங்களிலும் நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அவரின் காமெடிய...

அருவம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
நடிகர் சித்தார்த், கேத்தரின் தெரேசா நடிப்பில், இயக்குனர் சாய் ஷேகர் இயக்கத்தில் உணவு கலப்படத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான படமாக இந்த படம் வெளி வந்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். சித்தார்த், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையானவராக நடந்து கொள்கிறார். இடைவேளைக்குப் பின்தான் அவர் வேலை சார்ந்த காட்சிகள் படத்தில் வருகின்றன. டீ, தண்ணீர், மருந்து, பால், பருப்பு ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமானவை. சித்தார்த்தின் நேர்மையும், நடவடிக்கையும் அவருக்குப் பொருத்தமாக உள்ளன. அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் கேத்தரின் தெரேசா. வாசனையோ, நாற்றமோ அதை நுகரும் சக்தி அவருக்கு இல்லை. சமூக சேவையில் அக்கறையுடன் செயல்படுபவர். கேத்தரினைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரைக் காதலிக்கிறார் சித...

100 % காதல் திரை விமர்சனம் (Rank 3.5/5)

Review, Top Highlights
எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பிலும் நம்பர் ஒன்னாகவே இருக்கிறார். அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். கற்றுக்கொடுப்பவர்களிடமே வித்தையைக் காட்டுவார்களே அதுபோல் படிப்பில் ஜீ.வியையே மிஞ்சுகிறார். அடுத்து கதையில் ஒரு வில்லன் தேவைப்படுவதால் அவர்கள் இருவரையும் தாண்டி அதே கல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி முதல்நிலை எடுக்கிறார். ’ஈகோ’என்கிற இரண்டெழுத்து ஒரு காதல் ஜோடியை என்ன பாடுபடுத்தும் என்கிற அரதப்பழசான ஒரு கதையை 100 சதவிகிதம் அப்படியே தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் விதமாகவே இப்படத்துக்கு ‘100 % காதல்’என்று பெயரிட்டிருக்கிறார்கள் போலும். வழக்கமாக இரண்டு படிகள் ஏறினால் மூன்று படிகள் சறுக்கும் ஜீ.வி.பிரகாஷ், இதற்கு முன் நல்ல பெயர் சம்பாதித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’பெயரை இப்படத்தின...

‘அசுரன்’ – திரை விமர்சனம் ( தமிழ் சினிமாவின் அரசன்) Rank 4/5

Review, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள அசுரன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடக்கூரானுக்கும் சிவசாமியான தனுசுக்கும் இடையிலான நிலத் தகராரில் தனுஷின் மூத்த மகன் முருகன் கொடூரமாக கொல்லப்படுகிறார். அண்ணுக்காக பழித்தீர்க்கும் தனுசின் இளையமகன் சிதம்பரம், வடக்கூரானை வெட்டிக் கொலை செய்கிறார். இதற்காக பழிவாங்கத் துடிக்கும் வடக்கூரா னின் ஆட்கள் சிவசாமி குடும்பத்தை வேரறுக்க தொடங்குவதே படத்தின் கதை. இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி உள்ள வெற்றிமாறன், அ...
சை ரா நரசிம்ம ரெட்டி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

சை ரா நரசிம்ம ரெட்டி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
நடிகர்கள் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா மற்றும் தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ’சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். ராயலசீமாவின் சுதந்திரப் போராட்ட வீரரான ’யுயலவாடா நரசிம்ம ரெட்டியாக’, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ திரைப்படத்தில் நடித்துள்ளார் சிரஞ்சீவி. ஆங்கிலேயருக்கு எதிரான நரசிம்மாவின் போரை அடிப்படையாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயருக்கு எதிரான இந்தப் போர் 1857-ல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களை கொண்ட இந்த படத்தின் கதை. பெரும்பாலான படம் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் விதிக்கப்படும் வரி...

‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் கொண்டு மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. இந்த படத்தின் கதையை இங்கே பார்க்கலாம்.  சந்தேகத்தின்பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) கைது செய்கிறது காவல்துறை. ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இப்போது பார்த்திபன் கதை சொல்லத்தொடங்குகிறார். இதற்கு முன்பு சொல்லப்பட்ட அனைத்துப் படங்களிலும், பெயருக்காவது சில கதாபாத்திரங்கள் படத்தின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ எட்டிப்பார்க்கும். ஆனால், `ஒத்த செருப்பு' படத்தின் இரண்டு மணி நேரம் முழுக்க திரையில் பார்த்திபன் மட்டுமே. நடித்ததோடு மட்டுமல்லாமல் படத்தை எழுதி, இயக்கியும் இருக்கிறார். கேமராவுக்கு முன், கேமார...

‘பயில்வான்’ திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Review, Top Highlights
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் மல்யுத்த வீரராகவும் பாக்சராகவும் நடித்துள்ள படம் 'பயில்வான்'. இப்படத்தில் சுனில் ஷெட்டி, ஆகான்க்ஷா ஷர்மா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எஸ்.கிருஷ்ணா இப்படத்தை இயக்கி தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் இன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். பயில்வான் சர்தார் (சுனில் ஷெட்டி), ஆதரவற்ற நிலையில் சிறந்த மலயுத்த வீரராக இருந்து வரும் கிச்சா சுதிப் உடன் போட்டியில் மோத உள்ள நிலையில், கிச்சா சுதிப் தனது மகன் என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து நடக்கும் சம்பவங்களே, அதனால் உறவுகளில் உண்டாகும் மாற்றங்களுமே படத்தின் கதை. மல்யுத்த பயிற்சியாளர்...

ஜாம்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
யோகி பாபு நடிப்பில் அட்வென்சர் காமடி-டிராமாவாக உருவாக்கி இன்று திரைக்கு வந்துள்ள படம் ஜாம்பி. இந்த படத்தில் யோகிபாபு உடன் யாசிகா ஆனந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எம்பிபிஎஸ் படிக்கும் மாணவிகள் தங்கள் செமஸ்டர் விடுமுறைக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இதில், அவர்கள் சாப்பிடும் உணவில் ஜாம்பி வைரஸ் கலக்கப்படுவதால், ஏற்படும் விளைவுகளை முழுமையாக காமடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஜாம்பி-யை கையாள லோக்கல் ரவுடியான யோகிபாபுவை அழைக்கிறார்கள். இந்த படத்தில் கேமரா காட்சிகள் சிறப்பாக உள்ளது. இந்த படத்தில் ஜாம்பி-யாக பெண்களே இருப்பதால், அவர்களது மேக்கப் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. படத்தில் ஜாம்பி-யாக நடித்துள்ள ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இசையை பொறுத்தவரை, ஜாம்பி திரைபடம் என்பதால், அதற்கேற்ப இசையமைப்பட்டுள்ளது. இதில் ஹாலிவுட் படத்தில் பார்க்கப்பட்ட பல காட்சிகள் இடம்...

சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம் பலரும் அறியும் ஒரு நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இப்படத்தைத் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது சமூகத்தில் நிலவும் அவல நிலைகள் குறித்தும், அரசியல் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று இவரது நடிப்பில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படம் வெளியாகியுள்ளது. இப்படத்தில், போக்குவிதிமுறைகளை மதிக்கும் ஒரு போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக சித்தார்த் நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஜிவி பிரகாஷ், தீபா ராமானுஜம், காஷ்மிரா பர்தேஷி, லிஜோமோல் ஜோஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் அவள் படம் வெளியானது. இப்படம் தெலுங்கில் தி ஹவுஸ் நெக்ஸ் டோர் என்ற தலைப்பில் வெளியானது. தமிழில் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 2 ஆண்டுகள் மற்ற மொழிப் படங்கள...