Saturday, April 18
Shadow

Tag: பதிவு

நடிகர் சாந்தனு பாக்யராஜ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாந்தனு கிருஷ்ணசாமி பாக்யராஜ்  ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1998ஆம் ஆண்டு வேட்டிய மடிச்சு கட்டு என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகன் மற்றும் நடிகை சரண்யா பாக்யராஜின் தம்பியும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு சக்கரக்கட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை தொடர்ந்து ஆயிரம் விளக்கு, கண்டேன், அம்மாவின் கைப்பேசி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சாந்தனு 24, ஆகஸ்ட், 1986ம் ஆண்டு சென்னை, தமிழ்நாட்டில் பிறந்தார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் மற்றும் நடிகை பூர்ணிமாவின் மகன் ஆவார். இவருக்கு சரண்யா என்ற ஒரு சகோதரி உண்டு. இவர் நடித்த படங்கள்: கசட தபற, வானம் கொட்டட்டும், முப்பரிமானம், கோடிட்ட இடங்களை நிரப்புக, வாய்மை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சித்து +2, சக்கரகட்டி இவர் பாடிய பாடல் ...

நடிகை அஞ்சலிதேவி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலிதேவி பழம்பெரும் தெலுங்கு, மற்றும் தமிழ் திரைப்பட நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்துப் புகழ் பெற்றவர். அஞ்சனி குமாரி என்ற இயற்பெயரைக் கொண்ட அஞ்சலிதேவி ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பெத்தாபுரம் என்ற ஊரில் நூக்கையா என்பவருக்குப் பிறந்தவர். ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்த அஞ்சலிதேவி நடிப்புத் தொழிலுக்காக சென்னைக்கு 40களில் குடிபெயர்ந்தார். 1936 இல் வெளியான ராஜா ஹரிச்சந்திரா என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமான அவரை எல். வி பிரசாத் தனது கஷ்டஜீவி என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்தார். ஆனால் அத்திரைப்படம் முழுமை பெறாமல் பாதியிலேயே நின்று விட்டது. பின்னர் பிரபல இயக்குனர் சி. புல்லையாவின் இயக்கத்தில் வெளியான கொல்லபாமா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். புல்லையாவே அஞ்சனி குமாரி என்ற பெயரை அஞ்சலிதேவி என்ற பெயர...

நடிகர் டி. எஸ். பாலையா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
டி. எஸ். பாலையா  தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார். ‘‘பதி பக்தி’’ என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவர் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த ஏ.என்.மருதாசலம் செட்டியார், தன் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ‘மனோரமா பிலிம்ஸ்’ என்ற படக்கம்பெனியை தொடங்கினார். ‘‘ஆனந்த விகடன்’’ ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய ‘‘சதிலீலாவதி’’ என்ற கதையை படமாக்க அவர் தீர்மானித்தார். இந்த கதைக்கும், ‘ப...

நடிகர் மைக்கேல் தங்க துரை பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
இவர் இந்திய நடிகர் மட்டுமின்றி நடனம் ஆடுபவராகவும் இருந்து வருகிறார். இவர் முதல் முதலில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தார். ஜோடி நம்பர் ஒன் சீசனில் நடனமாடிய இவர், கனிமொழி திரைப்படம் மூலம் திரையுலகி நுழைந்தார். இவர் நடித்த படங்கள்: கனிமொழி, பர்மா, N4

நடிகர் வினீத் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வினீத் திரைப்பட நடிகர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அறுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தவர். வினீத் 1969, ஆகஸ்ட் 23-ம் நாளில் ராதாகிருஷ்ணன், சாந்தகுமாரி ஆகியோருக்கு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். அவருக்கு கவிதா என்ற சதோதரி உள்ளார். வினீத் பத்தாம் வகுப்பை தலசீரியில் உள்ள செயிண்ட் ஜோசப்ஸ் உயர்நிலைப்பள்ளியில் முடித்தார். பின்பு 1991 ஆம் ஆண்டில் தி நியூ கல்லூரியில் வணிகத்தில் இளங்கலைகளைப் படிப்பை படித்து முடித்தார். வினீத் 2004 ஆம் ஆண்டில் பிரிசில்லா மேனனை மணந்தார். தற்போது சென்னையில் வசிக்கிறார். அவருக்கு 2006-ஆம் ஆண்டில் அவந்தி என்ற மகள் பிறந்தார். இவர் நடித்த படங்கள்: சந்திரமுகி, காதல் தேசம், பிரியமான தோழி, தேவதை, உளியின் ஓசை, கட்டபொம்மன், ஆவாரம்பூ, காதல் கிறுக்கன்...

நடிகை வாணி கபூர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
வாணி கபூர்  இந்திய நடிகை மற்றும் விளம்பர நடிகை ஆவார். கபூர் 2013 ஆம் ஆண்டில் "பரிணீதி சோப்ரா" மற்றும் "சுசாந்த் சிங் ராஜ்புட்" ஆகியோர் நடித்த காதல் மற்றும் நகைச்சுவை "சுத் தேசி ரொமான்ஸ்" என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். அவரது நடிப்புத்திறன் 59 வது ஃபிலிம்ஃபேர் விருதுகளில் சிறந்த அறிமுக பெண் நடிகருக்கான விருதுகள் உட்பட பல விருதுகளையும் பரிந்துரைகளையும் இவருக்கு பெற்றுத் தந்தது, 2014 இல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமான ஆஹா கல்யாணம்", என்ற படத்தில் நடித்தார். இது மிதமான வெற்றியாக நிரூபிக்கப்பட்டது. கபூரின் தந்தை ஒரு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிலதிபர் ஆவார், மற்றும் அவரது தாயார் ஆசிரியராகைருந்து பின்னர், விற்பனை நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர் ஆனார். அவர் தில்லியில் அசோக் விஹார் மாதா ஜெய் கவுர் ப...

இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எஸ்.ஏ. ராஜ்குமார் என்பவர் தமிழ் நாடு, சென்னையைச் சேர்ந்த ஒரு இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார். செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார். இவர் இசையமைத்த தமிழ் படங்கள்: சின்னப்பூவே மெல்லப்பேசு,...

நடிகர் மோகன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மோகன் ஓர் புகழ்பெற்ற கோலிவுட் நடிகர். கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர். கன்னட, மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் அறியப்பட்டார். தமிழில் எண்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலஹாசன் முதன்மை வேடத்தில் நடித்திருந்த கோகிலா என்றத் திரைப்படத்தில் அறிமுகமானதால் கோகிலா மோகன் என அழைக்கப்பட்டார். தம்மை உருவாக்கிய பாலு மகேந்திராவை குருவாகக் கருதுகிறார். இவர் நடித்த படங்கள்: வந்தா மல, மூடுபனி, நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், காதோடுதான் நான் பேசுவேன், கடவுளுக்கு ஓர் கடிதம், இதோ வருகிறேன், காதலித்துப் பார், தீராத விளையாட்டுப் பிள்ளை, பயணங்கள் முடிவதில்லை, லாட்டரி டிக்கெட், சின்னஞ் சிறுசுகள், கோபுரங்கள் சாய்வதில்லை, இனியவளே வா, 23, நெஞ்சமெல்லாம் நீயே, அந்த சில நாட்கள், மனைவி சொல்லே மந்திரம், நாலு பேருக்கு நன்றி...

நடிகை சாய்ரா பானு பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சாய்ரா பானு சாய்ரா பானோ என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட நடிகர் திலிப் குமாரின் மனைவி. 1961 முதல் 1988 வரை பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 1982ஆம் ஆண்டு கலாநிதி இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படமான "கடவுளுக்கு ஒரு கடிதம்" திரைப்படத்தில் நடிகர் ராஜிவுக்கு இணையாக கதாநாயகியாக நடித்தார். சாயிரா பானு நடிகை நசீம் பானு அவர்களின் மகளாவார். சாய்ரா தனது குழந்தை பருவத்தில் பெரும் பகுதியை லண்டனில் கழித்தார். 1960 ஆம் ஆண்டில் சைரா பானு, தனது 16வது வயதில் இந்தித் திரைப்படங்களில் அவர் அறிமுகமானார்.[3] 1961 ஆம் ஆண்டில் ஜங்கிளீ என்ற படத்தில் ஷாமி கபூருடன் கதாநாயகியாக அறிமுகமானார், அதில் அவர் சிறந்த நடிகைக்கான முதல் பிலிம்பேர் பரிந்துரைப் பெற்றார். இந்த படத்தின் பிரபலமான பாடல் "யாஹூ! ! சஹாய் கோய் முஜே ஜங்கிள் கே " முகம்மது ரஃபி பாடினார். சாய்ரா பானு 1966 இல் நடிகர் திலீப...

நடிகர் சிரஞ்சீவி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சிரஞ்சீவி கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகஸ்ட் 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார் ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார் இவர் நடித்த படங்கள்: சயீரா நரசிம்ம ரெட்டி...