Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரை விமர்சனம் (2.5/5)

Latest News, Review
நடிகர் அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் ஆகிய படங்கள் உள்பட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இதில், ஆரவ், ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், ஆதித்யா மேனன், முனீஷ்காந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.. ஒரு திமிர்பிடித்த ரவுடி ஒருவன், மருத்துவ கல்லூரி மாணவரின் பேய் பிடித்த காரணத்தால் சாந்தமாக மாறுகிறார். அவரது கூட்டாளிகள் இந்த உண்மையை வெளி உலகத்திலிருந்து மறைத்து விடுகின்றனர். அவர் எப்படி மீண்டும் ரவுடியாக மாறினார் என்பதே படத்தின் கதை. கதை நாயகன் மார்க்கெட் ராஜா (அரவ்) ரவுடியாகவும், சாந்தமானவராகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். பிரபலமான ரவுடியான மார்க்கெட் ராஜா, அமைச்சர் ராதா (சயாஜி ஷிண்டே) பாதுகாப்பில் இருக்கிறார். மேலும், ராதாவின் போட்டியாளரான ரமதாஸை (ஹரீ...

ஆதித்ய வர்மா திரை விமர்சனம் (4/5)

Review, Top Highlights
விக்ரம் மகன் த்ருவ் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள ஆதித்ய வர்மா படம் இன்று வெளியாகியுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பல பிரச்சனைகளுக்கு பிறகு ஆதிய் வர்மா ரிலீஸாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் மகன் என்பதால் த்ருவ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சியான் விக்ரமின் நடிப்பை கண்டு அசந்து போவாதவர்களே இந்திய சினிமாவில் இருக்க மாட்டார்கள். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன, ஆக்டிங்கில் வேற லெவல் அவுட்புட்டை த்ருவ் விக்ரம் தனது முதல் படத்திலே கொடுத்துள்ளார் என படத்தை பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆதித்ய வர்மா படம் ஒரு பக்காவான ரீமேக் படம் என்றும், கோலிவுட்டில் கனவு கண்ணனுக்கு இருந்த வெற்றிடத்தை ஆதித்ய வர்மா அசால்ட்டாக நிரப்பியுள்ளார்.இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். படத்தின் முதல் பாதி சிறப்பாக ...

ஆக்ஷன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Review, Top Highlights
இயக்குனர் சுந்தர்.சி தன்னுடைய காமெடி டிராக்கை விட்டு இப்போது இயக்கியிருக்கும் படம் ஆக்ஷன். இந்த படத்தில் விஷாலை வைத்து எப்படிபட்ட ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்துள்ளார், இதில் ஜெயித்துள்ளாரா என்பதை பார்ப்போம். விஷால் படத்தில் ஆரம்பத்திலேயே தமன்மாவுடன் ஒரு இண்டர்நேஷனல் கிரிமினலை பிடிக்கின்றார். அதை தொடர்ந்து கதை பின்னோக்கி செல்ல, விஷால் மிலிட்டரியில் பெரிய பதவியில் இருக்கிறார். அவருடைய அப்பா பழ.கருப்பையா தமிழகத்தின் முதலமைச்சர். விஷாலின் அண்ணன் ராம்கி அடுத்து முதலமைச்சராக தயாராக, இவர்கள் மத்தியில் ஒரு கட்சியுடன் ஒரு கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அதற்காக அந்த கட்சி தலைவர் தமிழகத்தில் மாநாடு நடத்த, அப்போது ராம்கி நண்பர் மூலமாக ஸ்டேஜில் பாம் வைத்து அந்த கட்சி தலைவரை கொள்கின்றனர். இந்த பழி விஷால் குடும்பத்தின் மீது விழ, இதன் உண்மையை அறிய உலகம் சுற்றி வில்லனை பிடிப்பதே இந்த ஆக்‌...

கைதி திரை விமர்சனம் (4.5/5)

Review, Top Highlights
கார்த்தி டெல்லி என்கிற ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். நரேன் தலைமையிலான போலீஸ் குழு பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றுகிறது. அதை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் வைக்கிறார்கள். இது குறித்து அறிந்த போதைப் பொருள் கும்பல் அங்கு வந்து பணியில் இருக்கும் அனைத்து போலீசாருக்கும் மயக்க மருந்து கொடுக்கிறது. போதைப் பொருள் விவகாரத்தில் காயம் அடைந்த நரேன் பரோலில் வெளியே வரும் டெல்லியிடம் உதவி கேட்கிறார். பிறந்ததில் இருந்து பார்க்காத தனது மகளை பார்க்க கிளம்பிய டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு எப்படி உதவி செய்கிறார், வில்லன்களை எப்படி எதிர்கொள்கிறார், மகளை எப்படி சந்திக்கிறார் என்பது தான் கதை. பரபரவென்று போகும் திரைக்கதையால் பாடல்கள் இல்லாததும், ஹீரோயின் இல்லாததும் குறையாக தெரியவில்லை. சொல்லப் போனால் டூயட் வைத்திருந்தால் தான் மோசமாக இருந்திருக்கும். படத்திற்கு பின்னணி இசை பெரிய பிளஸ். அ...

பிகில் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
நடிகர் விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாக்கியதுடன், இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர் மைக்கல் விஜய். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார். இந்நிலையில் அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார். அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக மாறுகிறார். ஆனால், அவரை ஏற்க மறுக்கும் பெண்கள், அவர்கள் மனதில் வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை. மு...

பெட்ரோமாக்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் நடிகை தமன்னா, சத்யன், முனீஷ்காந்த், மைம் கோபி, லிவிங்ஸ்டன், பிரேம், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் காமெடி கலந்த பேய் படமாக உருவாகி உள்ளது பெட்ரோமாக்ஸ். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். நடிகை நயன்தாராவை தொடர்ந்து, தமன்னாவும் தற்போது ஹீரோ அல்லாத ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடித்து வருகிறார். தமன்னா சோலோவாக நடித்துள்ள பெட்ரோமாக்ஸ் படம் 'அனந்தோ பிரம்மா' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமாகும். தெலுங்கு வெர்சனை போலவே தமிழிலும் பெட்ரோமாக்ஸ் படம் காமெடி சீன்கள் கொண்ட படமாக உருவாக்கியுள்ளது. தற்போது முன்னணி காமெடியனாக உருவாகி உள்ள யோகி பாபுவின் காமெடியும் இந்த படத்தில் சிறப்பாக உள்ளது. இந்த படம் பேய் படம் என்றாலும், குழந்தைகள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. லிவிங்ஸ்டன் சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். படத்தின...

பப்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
மிகவும் சீரியஸ் படங்களாக பார்த்து வந்த நம்ம தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக மிகவும் யூத்தான ஒரு கதைக்களத்தோடு வெளியாகி உள்ளது "பப்பி". இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். அறிமுக இயக்குனர் நட்டு தேவ். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தை வருண் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவரின் யதார்த்தமான ஒரு யூத்துக்கு உண்டான துள்ளலோடு சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர் கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே பிலிம்பேர் சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டி சென்றவர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காமெடி கலந்த சென்டிமெண்ட் படத்தில் கலக்கியுள்ளார் யோகி பாபு என்றே சொல்ல வேண்டும். அவர் கிட்ட தட்ட அனைத்து படங்களிலும் நடித்தாலும் ஒரு சில காட்சிகளில் மட்டுமே அவரின் காமெடிய...

அருவம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
நடிகர் சித்தார்த், கேத்தரின் தெரேசா நடிப்பில், இயக்குனர் சாய் ஷேகர் இயக்கத்தில் உணவு கலப்படத்தைப் பற்றிய ஒரு வெளிப்படையான படமாக இந்த படம் வெளி வந்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். சித்தார்த், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரியாக, மிகவும் நேர்மையானவராக நடந்து கொள்கிறார். இடைவேளைக்குப் பின்தான் அவர் வேலை சார்ந்த காட்சிகள் படத்தில் வருகின்றன. டீ, தண்ணீர், மருந்து, பால், பருப்பு ஆகியவற்றில் என்னென்ன மாதிரியான கலப்படங்கள் எப்படி எல்லாம் நடக்கின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமானவை. சித்தார்த்தின் நேர்மையும், நடவடிக்கையும் அவருக்குப் பொருத்தமாக உள்ளன. அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் கேத்தரின் தெரேசா. வாசனையோ, நாற்றமோ அதை நுகரும் சக்தி அவருக்கு இல்லை. சமூக சேவையில் அக்கறையுடன் செயல்படுபவர். கேத்தரினைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவரைக் காதலிக்கிறார் சித...

100 % காதல் திரை விமர்சனம் (Rank 3.5/5)

Review, Top Highlights
எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பிலும் நம்பர் ஒன்னாகவே இருக்கிறார். அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். கற்றுக்கொடுப்பவர்களிடமே வித்தையைக் காட்டுவார்களே அதுபோல் படிப்பில் ஜீ.வியையே மிஞ்சுகிறார். அடுத்து கதையில் ஒரு வில்லன் தேவைப்படுவதால் அவர்கள் இருவரையும் தாண்டி அதே கல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி முதல்நிலை எடுக்கிறார். ’ஈகோ’என்கிற இரண்டெழுத்து ஒரு காதல் ஜோடியை என்ன பாடுபடுத்தும் என்கிற அரதப்பழசான ஒரு கதையை 100 சதவிகிதம் அப்படியே தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் விதமாகவே இப்படத்துக்கு ‘100 % காதல்’என்று பெயரிட்டிருக்கிறார்கள் போலும். வழக்கமாக இரண்டு படிகள் ஏறினால் மூன்று படிகள் சறுக்கும் ஜீ.வி.பிரகாஷ், இதற்கு முன் நல்ல பெயர் சம்பாதித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’பெயரை இப்படத்தின...

‘அசுரன்’ – திரை விமர்சனம் ( தமிழ் சினிமாவின் அரசன்) Rank 4/5

Review, Top Highlights
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள அசுரன் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். எழுத்தாளர் பூமணி எழுதிய நாவல் ‘வெக்கை’. இந்தக் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் ’அசுரன்’. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வடக்கூரானுக்கும் சிவசாமியான தனுசுக்கும் இடையிலான நிலத் தகராரில் தனுஷின் மூத்த மகன் முருகன் கொடூரமாக கொல்லப்படுகிறார். அண்ணுக்காக பழித்தீர்க்கும் தனுசின் இளையமகன் சிதம்பரம், வடக்கூரானை வெட்டிக் கொலை செய்கிறார். இதற்காக பழிவாங்கத் துடிக்கும் வடக்கூரா னின் ஆட்கள் சிவசாமி குடும்பத்தை வேரறுக்க தொடங்குவதே படத்தின் கதை. இரண்டாம் பகுதிக்கு தனது பாணியில் திரைக்கதை எழுதி உள்ள வெற்றிமாறன், அ...