Monday, January 17
Shadow

நடிகர் பிரபுதேவா பிறந்த தின பதிவு

பிரபுதேவா இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் நடன ஆசிரியர் சுந்தரத்தின் மகனாவார். இவரின் வேகமாக நடனமாடும் திறமைக்காக இவர் இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று பிரபலமாக அறியப் படுகின்றார். இவரது முதலாவது நடனம் வெற்றிவிழாத் திரைப்படத்திற்கானதாகும். இவர் இன்றுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடனமாடியுள்ளார். மின்சார கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவா சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றுள்ளார்.
நடன ஆசிரியராக பல திரைப்படங்களில் பங்காற்றிய இவர் 1989 ஆவது ஆண்டில் வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுடன் இணைந்து நடித்தார். இதுவே இவர் முழுநேர கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமாகும். நடிப்பைத் தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்த இவர் போக்கிரி, வில்லு உட்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலமாக சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
சென்னையில் பிறந்த  பிரபுதேவா ராம்லாத் (லதா) என்ற பெண்ணைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள், ஆனால் மூத்த ஆண் குழந்தை 2008 ஆம் ஆண்டில் புற்றுநோய் காரணமாக இறந்தது. பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் வாழ்ந்து வருவதாகவும், தன்னை அவருடன் சேர்ந்து வாழ விடும் படியும் மனைவி ராம்லாத் வழக்குத் தொடர்ந்தார். அத்துடன், ராம்லாத் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். ராம்லாத்திற்கு ஆதரவாக பெண்கள் அமைப்புகள் பல குரல் கொடுத்தன. 2012 ஆம் ஆண்டில் நயன்தாரா தாம் பிரபுதேவாவிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டதாக அறிவித்தார். பிரபுதேவா பின்னர் மும்பைக்குக் குடிபெயர்ந்து, பின்னர் சென்னையில் தங்கி பல படங்களில் நடித்துவருகிறார்.
பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் ராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா பாடலிற்குப் பின்னணியில் ராஜூ சுந்தரத்துடன் நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு இவரது தந்தையே நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ஏழையின் சிரிப்பிலே திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பேருந்துகூலி வேலையாளாக நடித்தார். மும்பை: டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபுதேவா என்று ஏபிசிடி 2 இந்தி படத்தின் ஹீரோ வருண் தவான் தெரிவித்துள்ளார். ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா, சல்மான் யூசுப் கான் உள்ளிட்டோர் நடித்த ஏபிசிடி படம் சூப்பர் ஹிட்டானது. முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஏபிசிடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதையடுத்து ரெமோ ஏபிசிடி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
இவர் நடித்த படங்கள்: சார்லி சாப்ளின் 2, தேவி 2, பொன் மாணிக்கவேல், எங் மங் சங், லக்ஷ்மி, மெர்க்குரி, குலேபகாவலி, தேவி, உருமி, தோனி, எங்கேயும் காதல், சுயம்வரம், காதலா காதலா
இவர் தயாரித்த படங்கள்: விநோதன், தேவி 2, தேவி
இவர் இயக்கிய படங்கள்:  கருப்புராஜா வெள்ளைரஜா, வெடி, எங்கேயும் காதல், வில்லு, போக்கிரி
இவர் பாடல் எழுதிய படம்:  வில்லு
இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படம்: உல்லாசம்
CLOSE
CLOSE