
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘தல 57’ படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷரா ஹாசனும் நடித்து வருகிறார்கள்.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. இதுவரை பல்கேரியாவில் நடந்த படபிடிப்பு இப்போது சென்னையில் தொடங்கியுள்ளது. என்பது சதவிதம் படபிடிப்பு முடிந்த நிலையில் மிச்சம் இருக்கும் பகுதிகள் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
முதலில் இதன் படப்பிடிப்பை ஜனவரி மாத இறுதியில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் தற்போது இப்படம் பிப்ரவரியில்தான் முடியும் என சொல்லப்படுகிறது. மேலும் மே இறுதியில் அல்லது ஜூனில் படம் வெளியாகுமாம்.
