பிப்ரவரி 2ம் தேதி முதல் பார்வைக்கு முன்னே தல 57 படத்தின் டைட்டில் கசிந்தது
அஜித் தற்போது நடித்து வரும் ‘தல 57’ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், அப்படத்திற்கு இதுதான் தலைப்பு என்று சமூக வலைத்தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவராக புதுபுது வதந்திகளை கிளப்பி வருகின்றனர்.
அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய ஆங்கிலத்தில் V வரும்படியான படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளதால், அஜித் நடிக்கும் இந்த படத்திற்கும் ஆங்கிலத்தில் V வரும்படியான தலைப்புதான் வைக்கப்படும் என்று ஒரு செய்தி பரவியது.
இதையடுத்து, இப்படத்திற்கு ‘வதம்’ அல்லது ‘விவேகம்’ இந்த தலைப்புகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதில், ‘விவேகம்’ என்ற தலைப்பையே படக்குழுவினர் தங்களின் பரிசீலனையில் முதல் இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வருகிற பிப்ரவரி 2-ந் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெள...









