தல 57 படக்குழுவினர் வெளிநாடுகளில் நடத்தி வந்த முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகளின் படப்பிடிப்பை படக்குழுவினர் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.
ஒருமாத காலம் தொடர்ந்து படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், தற்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பை சென்னையில் இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகிவரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், முதன்முறையாக அஜித்துடன் காஜல் அகர்வால் மற்றும் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசனும் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் சிறப்பை கொடுத்திருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை படபிடிப்பை முடித்ததும் இந்த குழு அமெரிக்கா செல்ல இருகிரதி இங்கு முக்கிய சண்டை காட்சிகள் மற்றும் பாடல் படபிடிப்புக்கு செல்கின்றனர் .