
தளபதி ரசிகர்கள் எப்பவும் புத்துணர்ச்சியுடன் இருப்பவர்கள் அதுவும் தளபதியை பற்றி ஒரு செய்தி வந்தால் போதும் மேலும் இவர்களை சொல்லவே வேண்டாம் அந்த அளவுக்கு தெம்பாக ஆகிவிடுவார்கள் அந்த வகையில் இதுவும் தளபதி ரசிகர்களுக்கு தெம்பு கொடுக்கும் செய்தி தான் தளபதியின் படபிடிப்பு எப்போது என்று காத்து இருக்கும் தளபதி ரசிகர்களுக்கு சுவையான செய்தி
நடிகர் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
படத்திற்கான போட்டோஷூட் ஏற்கனவே முடிந்து, புகைப்படங்கள் சில மணி நேரங்களில் லீக் ஆகியிருந்தது. அது படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் தளபதி62 படத்தின் ஷூட்டிங் நாளை (ஜனவரி 19, 2018) பூஜையுடன் துவங்குகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
