
தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் இதெல்லம் நமக்கு தெரிந்த விஷ்யம் புது தகவல் என்ன தெரியுமா படதின் கதை தான் மக்களின் அன்றாட பிரச்சனையை சொல்லும் கதை தான்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் கதை விவசாயம் பற்றியும் விவசாயிகளின் கஷ்டங்களை பற்றியும் பேசும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது படம் விவசாயத்தை மட்டும் பேசாமல் அரசியல் பற்றிய கதையும் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தளபதி-62 தீபாவளிக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
