
சமீபத்தில் விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அவரது முதல் நடவடிக்கையாக திருட்டு வி.சி.டி. மற்றும் ஆன்லைன் மூலம் வெளியாகும் புது படங்களை தடுப்பது குறித்த வேலைகளை தான் கையில் எடுத்தார். அண்மையில் வெளியான பாகுபலி-2′ படம் ரிலீஸ் ஆன அன்றே இணைய தளத்தில் வெளியானது.
இதுகுறித்து விஷால் போலீசில் புகார் அளித்தார். மேலும், மே.30 தேதி முதல் திரையுலகை சார்ந்த அனைவரும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இணைய தளத்தில் வெளியானாலும் ‘பாகுபலி-2’ படம் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டி திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த போராட்டம் நடக்குமா என்று ஒரு கேள்வி குறியாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் ஜூன் முதல் வாரம் தாணு அவரின் ஆதரவு தயாரிப்பாளரை வைத்து படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் விஷாலின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக பலர் நடந்து கொண்டு வருகிறார்கள் என்றும் இதனால் விஷாலின் திட்டம் எல்லாமே தவுடு பொடியாகும் என்றும் ஒரு சிலர் கூறிவருகிறார்கள்.
