Thursday, April 25
Shadow

“தொண்டன்” அரசியல் படம் இல்லை மக்களுக்கான படம் – சமுத்திரகனி

தமிழ் சினமாவை பொறுத்த வரைக்கும் பலர் ஒரு பொழுதுபோக்கு சினிமாவாக தான் பார்க்கிறார்கள் ஒரு சிலர் சினிமாவை தன் வாழ்கையாக பார்கிறார்கள் அப்படி பார்க்கும் இயக்குனர்கள் என்பது விரல் விட்டு என்ன கூடியவர்களே என்று தான் சொல்லணும். அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர் சமுத்திரகனி.

சமுத்திரகனி படங்கள் என்றாலே சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை சொல்லும் படமாக தான் இருக்கும் அதோடு மக்களுக்கு நல்ல கருத்தையும் சொல்லுவார் அப்பா படத்தில் கல்விமுறையை நிமிர்ந்து நில் அரசியல் மற்றும் அரசாங்க ஊழியர்கள் பண்ணும் அவலநிலையை கூறினார். இவர் படத்தில் காதலுக்கும் ஒரு வரைமுறை இருக்கும் அதே போல இவர் நடிக்கும் படங்களும் சமுதாய விழிப்புணர்வுடன் இருக்கும் கதாபாத்திரம் தான் அதிகம் என்று சொல்லலாம்.

சமுத்திரகனி தன் அடுத்த படைப்புடன் வருகிறார் இந்த படத்துக்கு தொண்டன் என்ற தலைப்பில் வருகிறார் . தொண்டன் என்றதும் நம்மக்கு அரசியல் தான் நியாபகம் வரும் ஆனால் இவர் இல்லை மக்கள் பிரச்சனையை எவன் கையில் எடுகிறானோ அவன் தான் தொண்டன் என்கிறார்.

இந்த படத்தில் சமுத்திரகனி, சுனைனா, விக்ராந்த் , கஞ்சா கருப்பு தம்பிராமையா,சூரி, ஞானசம்பந்தம், திலீபன், சௌந்தர் ராஜன் மற்றும் பலர் நடிப்பில் ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஏகாம்பரம் ஒளிப்பதிவில் உருவாகிவரும் படம் தொண்டன் .

இந்த படத்தில் இந்த முறை ஆம்புலன்ஸ் ( அதாவது 108 ) சேவையும் அதன் மகத்துவமும் என்ன என்று சொல்லவருகிறார் அதோடு இளைஞனின் ஒரு முக்கிய பிரச்சனையும் கையில் எடுக்கிறார். இதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையிடம் உங்கள் பெயரை பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டதுக்கு முடியாது என்றதால் நாங்களே ஒரு பெயர் உயிர் ஆம்புலன்ஸ் சர்விஸ் என்று செய்தோம் அதன் மூலம் எப்படி நல்லது செய்கிறோம் என்றும் சொன்னார். அதோடு ஜல்லிக்கட்டு பிரச்சனை விவசாயிகள் பிரச்சனை ஈன்று பல பிரச்சனைகளை கையில் எடுத்துள்ளோம். இந்த படம் வெற்றி பெற்றால் தமிழகம் முழுதும் இருக்கும் மாவட்டங்களில் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி உயிர் என்ற பெயரில் வழங்குவோம் என்றார்.

இந்த நிகழ்வில் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஒளிபரப்பப்பட்டது. மூண்டு பாடல்களும் மூன்று முத்துகள் கதைக்கு தேவையான பாடல்களும் வரிகளும் அமைந்துள்ளது இந்த பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார், ட்ரைலர் பார்க்கும் போது படத்தின் அருமை தெரிகிறது அதே போல படத்தை எப்ப பாப்போம் என்று தொனவைக்கிறது குறிப்பாக விக்ராந்த் மற்றும் சுனைனா பகுதிகள் மிகவும் ஈர்க்கவைக்கிறது .

Leave a Reply