
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் `தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
ஸ்டூடியோ கிரீன்ஸ் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சூர்யா – கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்த படம் தணிக்கைக்குழு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தணிக்கை முடிந்த பிறகு இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே படம் பொங்கல் தினத்தில் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.