Thursday, July 16
Shadow

பூஜையுடன் தொடங்கிய ‘வாணவேடிக்கை’… சண்முக பாண்டியனின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இயக்குநர் திருவின் கமர்ஷியல் படைப்பு!

பூஜையுடன் தொடங்கிய ‘வாணவேடிக்கை’… சண்முக பாண்டியனின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் இயக்குநர் திருவின் கமர்ஷியல் படைப்பு!

சென்னை, ஜூலை 16:

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எல்.கே. சுதீஷ் எம்.பி. தயாரிக்கும் ஒன்பதாவது திரைப்படமான ‘வாணவேடிக்கை’ இன்று சென்னையில் நடைபெற்ற எளிமையான, ஆனால் உற்சாகமான பூஜை விழாவுடன் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பைத் தொடங்கியது.

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படம், வணிக அம்சங்களும் ஆழமான குடும்ப உணர்வுகளும் கலந்த படைப்பாக உருவாகிறது.

படத்தின் முதல் காட்சியை பிரேமலதா விஜயகாந்த் கேமராவை இயக்கி தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி. அவர்களின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் அடிக்க, படப்பிடிப்பு இனிதே ஆரம்பமானது.

 

‘நான் சிகப்பு மனிதன்’, ‘தீராத விளையாட்டு பிள்ளை’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் திரு இந்த படத்தை இயக்குகிறார். பூஜை விழாவில் இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் ஜெயம் ராஜா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

படத்தில் சரவணன், இயக்குநர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜெயப்பிரகாஷ், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை அர்வி, இசையை சாம் சி.எஸ்., கலை இயக்கத்தை ராஜ்கமல், படத்தொகுப்பை பிரேம்குமார் கவனிக்கின்றனர்.

படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

படம் குறித்து இயக்குநர் திரு கூறுகையில், “இதுவரை ரசிகர்கள் பார்த்திராத சண்முக பாண்டியனை இந்த திரைப்படத்தில் காண்பார்கள். தந்தை – மகன் உறவின் உணர்வை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அழகிய கமர்ஷியல் படமாக ‘வாணவேடிக்கை’ உருவாகி வருகிறது. படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு படத்தின் மற்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்,” என்றார்.

பூஜையுடன் துவங்கியுள்ள ‘வாணவேடிக்கை’, சண்முக பாண்டியனின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்ற எதிர்பார்ப்பை இந்த தொடக்க விழாவே ஏற்படுத்தியுள்ளது.

‘Vaanavedikkai’ Goes on Floors with a Grand Pooja Ceremony; Director Thiru Promises a Never-Seen-Before Shanmuga Pandian

Chennai, July 16:

The shooting of ‘Vaanavedikkai’, the ninth production venture of Captain Cine Creations, produced by L.K. Sudheesh MP, officially commenced today with a traditional pooja ceremony in Chennai.

Starring Shanmuga Pandian Vijayakanth in the lead, the film is set to be a commercial entertainer blended with strong emotional elements, centering on the bond between a father and son.

The inaugural shot was ceremonially switched on by Premalatha Vijayakanth, while Poorna Jothi, wife of producer L.K. Sudheesh MP, gave the first clap, marking the beginning of the film’s production.

The film is directed by Thiru, known for acclaimed films such as Naan Sigappu Manithan and Theeradha Vilaiyattu Pillai. The launch event was attended by noted filmmakers Suseenthiran and Jayam Raja, who extended their best wishes to the cast and crew.

The supporting cast includes Saravanan, Director Tamil, Amma Creations Siva, Jayaprakash, Kumki Ashwin, Sara, Padur Ramesh, and several other prominent actors in pivotal roles.

The technical team features Arvi as the cinematographer, Sam C.S. as the music composer, Raj Kamal as the production designer, and Prem Kumar as the editor.

The entire shooting schedule of Vaanavedikkai will be completed in Chennai.

Speaking about the film, director Thiru said, “Audiences will witness a side of Shanmuga Pandian they have never seen before. ‘Vaanavedikkai’ is a beautifully crafted commercial entertainer that revolves around the emotional relationship between a father and son. We will reveal more exciting updates about the film once the shoot is completed.”

With its official launch, Vaanavedikkai has already generated considerable excitement among fans and industry circles, raising expectations for what promises to be a significant milestone in Shanmuga Pandian’s acting career.