
மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி என்று தான் சொல்லணும் விஜய் மற்றும் அட்லி கூட்டணி காரணம் முதல் படத்திலே நூறு கோடி வசூல் மட்டும் இல்லாமல் வித்தியாசமான கதை களம் அதுமட்டும் இல்லாமல் விஜய் லுக் முதல் விதியாசபடுத்திய பெருமை அட்லீயை சாரும் என்று கூட சொல்லலாம். மறுபடியும் இந்த கூட்டணி இணைந்தால் நல்ல இருக்கும் என்று தோன்றாத ஆளே கிடையாது அப்படி இருக்கும் பட்சத்தில் தான் இந்த மாஸ் வெற்றி கூட்டணி மீண்டும் தெறிக்க இணைந்துள்ளது.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் விஜய்-61. இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூவரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும் படப்பிடிப்பு போலந்து போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்கான ஹிந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவி வந்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது இப்பத்திற்கான ஹிந்தி டப்பிங் உரிமையை 11 கோடிக்கு விற்றுள்ளதாம் படக்குழு.
தமிழ் படத்திற்கு ஹிந்தி டப்பிங் சாட்டிலைட் ரைட்ஸ் 11 கோடிக்கு விற்பனையானது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது
