
பைரவா தோல்விக்கு பிறகு விஜய்க்கு கிடைத்த புது தெம்பு என்று தான் சொல்லணும். அட்லீயுடன் ஜோடி சேரும் விஜய் படத்தின் டைட்டிலில் மிகவும் குழப்பத்தில் இருந்த போது அட்லி அண்ணா நம்ம பழைய டைட்டிலில் அதாவது தெறி 2 என்று போவேமே என்று சொல்ல ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு அந்த டைட்டில் தாணு சார் கொடுக்க அனுமதி வேண்டும் என்று சொன்ன போது எதிலும் தலையிடாத விஜய் நானே பேசுகிறேன் என்று தாணுவிடம் கேட்டார். தாணுவும் விஜய் கேட்டவுடன் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் இப்படத்துக்கு தெறி 2 என்கிற அடைமொழி சிறப்பாக இருக்கும் என எண்ணிய விஜய், தனது விருப்பத்தை தெறி தயாரிப்பாளர் தாணுவிடம் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி முதல் வாரம் தொடங்குவது உறுதியாகிவிட்டது. இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கிறது.
