
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து, தற்போது இரவுபகலாக விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படம் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்டது ஆனால் இந்த படம் இப்போது ஏப்ரல் மாதம் 7ம்தெதி வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லபடுகிறது. இதை குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஏற்கனவே அஜித்தின் தல 57 படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி வெளியாகும் என்று சொன்ன படம் தற்போது ஜூன் மாதம்23ம் தேதி ரம்ஜானுக்கு வேயாகும் என்று சொல்லபடுகிறது அதே போல் தனுஷின் பவர் பாண்டி ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் நிலையுள்ளது இந்த இரண்டு படங்களுக்கு முன் ஏப்ரல் 7ஆம் தேதியே ‘காற்று வெளியிடை’ வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி, அதிதிராவ் ஹைதி, ஆர்ஜே பாலாஜி, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
