Sunday, April 19
Shadow

விஜய் 62 விஜய்யுடன் நடிக்க போட்டி போடும் நாயகிகள் யார் தெரியுமா ?

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி கூட்டணி என்று நாம் அறிந்த விஷயமே விஜய்க்கு முதல் நூறு கோடி கிளப் கொடுத்த இயக்குனர் என்று சொல்லணும் அது மட்டும் இல்லாமல் அடுத்து அடுத்து நூறு கோடி கிளப் கொடுத்த இயக்குனர் தற்போது இந்த இருவரும் மீண்டும் இணைகிறார்கள்.

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணி என்றதும் ரசிகர்கள் சந்தோசத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது இந்த படத்தை மீண்டும் ஒரு சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் சன் தொலைக்காட்சியின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்குரார்கள் இதனால் இந்த படத்துக்கு மேலும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது அது மட்டும் இல்லாமல் இதுவரை இல்லாத பொருள் செலவில் இந்த படம் தயாராகபோகிறது என்பது ஒரு முக்கிய அம்சம்

ஏ.ஆர். முருகதாஸ் தற்போது ஸ்பைடர் படத்தின் இறுதிகட்ட பணியில் மிகவும் தீவிரமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதோடு இந்த படத்தின் நட்சத்திர தேர்வும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் படத்தில் நாயகியாக நடிக்க இருவர் போட்டி போடுகின்றனர் இருவரும் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் நாயகிகள் தான் ஒருவர் சொனக்க்ஷி சின்ஹா இன்னும் ஒருவர் தற்போது நடித்து கொண்டு இருக்கும் ஸ்பைடர் பட நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் தான் இந்த இருவரும் இந்த படத்தில் நடிக்க கடும் போட்டி போடுவதாக தகவல் கசிந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று செய்திகள் கசிந்துள்ளது. எனவே இந்த படம் விஜக்கும் விஜய் ரசிகர்களுக்கும் நிச்சயம் ஒரு பயங்கரமான ட்ரீட் ஆகா இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை .

Leave a Reply