Friday, September 30
Shadow

விஜய் கடந்து வந்த வெற்றி தோல்விகள் பாதைகள் ஒரு அலசல்

இளைய தளபதி விஜய் இன்று இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங். பாலிவுட் நடிகர்களே அஞ்சி ஒதுங்கும் அளவிற்கு தனக்கென பெரிய மார்க்கெட்டை உருவாக்கியவர். இன்றய முக்கிய ஏன் முதல் மூன்று நடிகர்களில் முக்கிய அங்கம் வகிப்பவர் என்றால் அது விஜய் தன் தந்தை உதவியுடன் வந்தாலும் தனக்கென ஒரு ஸ்டைல் இதன் மூலம் தமிழ் சினிமாவில் நிரந்தர இடம் பிடித்தவர் . இவர் வெற்றி தோல்வியை பார்க்கலாமா .

ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல சொதப்பல்களை கடந்து தான் இங்கு வந்துள்ளார், விஜய் கதாநாயகனாக தன் தந்தை இயக்கத்தில் நடித்த நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமானார்.

விஜய் ஒரு வெற்றிக்காக பல கஷ்டங்களை கடந்து வந்தார், ஆரம்பத்திலிருந்து பல தோல்விகளை கண்டாலும் பூவே உனக்காக விஜய்யின் திரைப்பயணத்தையே திருப்பி போட்டது.

இதன் பின் மீண்டும் மாண்புமிகு மாணவன், காலமெல்லாம் காத்திருப்பேன் என தோல்வி படங்களை கொடுக்க, லவ் டுடே படத்திற்கு பிறகு தான் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்தது.

சரி இனி விஜய் ஜெட் வேகத்தில் பயணிப்பார் என நினைத்தனர், அதற்கு ஏற்றார் போல் தான் நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

ஆனால், மீண்டும் நிலவே வா, என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கனவு, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்வி படங்களை கொடுத்து கிட்டத்தட்ட சினிமா பயணத்திலிருந்தே ஒதுங்கும் நிலையில் இருந்தார்.

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி மூலம் மீண்ட இவர் கொஞ்சம் சுதாரித்து ப்ரியமாணவளே, பத்ரி, ப்ரண்ட்ஸ் என வெற்றி படங்களை கொடுத்த நிலையில் ஷாஜகான், தமிழன், பகவதி, வசீகரா, புதிய கீதை என மீண்டும் தொடர் தோல்வி படங்கள்.

விஜய் படம் என்றாலே காதல் கதையாக தான் இருக்கும் என நினைத்த காலம் போக, ஆக்ஷன் அவதாரம் எடுத்து திருமலை மூலம் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

திருப்பாச்சி, மதுர, சிவகாசி என வெற்றி படங்கள் கொடுத்த அதே நேரத்தில் சுக்ரன், ஆதி, சச்சின் என கொஞ்சம் தடுமாறவும் செய்தார், இவை பெரிதும் பாதிக்கவில்லை.

விஜய்யின் திரைப்பயணத்திலேயே மிகவும் மோசமான காலம் 2007ல் தான் தொடங்கியது, அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து 5 தோல்வி படங்களை கொடுத்து மிகவும் மார்க்கெட் வீழ்ச்சியில் இருந்தார்.

பிறகு காவலன், வேலாயுதம், நண்பன் என கொஞ்சம் சுமாரான படங்களில் நடித்தாலும் விஜய்க்கு பழைய மாஸ் வரவே இல்லை, அதன் பிறகு எப்படியோ ஏ.ஆர்.முருகதாஸுடன் அமைத்த கூட்டணி துப்பாக்கி, கத்தி என விஜய் வேறு லெவலுக்கு சென்றார்.

அந்த தருணத்திலும் இடையில் தலைவா, ஜில்லா என சொதப்பினாலும் பெரிதும் பாதிப்பு இல்லை, யார் கண் பட்டதோ புலி என்ற படுதோல்வி படத்தை கொடுத்தார், இந்த படத்தின் மூலம் விஜய் சமூக வலைத்தளங்களில் பெரிதும் கிண்டலுக்கு ஆளானாலும் அமைதியாக இருந்து அடுத்த வருடமே தெறி ஹிட் கொடுத்து கம்பீரமானார்.

விஜய் பல சொதப்பல்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார், இனி இதுப்போன்ற சொதப்பல்களை செய்யாமல் கவனமாக அடுத்தக்கட்டத்திற்கு செல்வார் என்று எதிர்ப்பார்ப்போம்.

Leave a Reply