
தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்று விஜய் ஆண்டனியை சொல்லலாம் காரணம் தொடர் வெற்றி அது மட்டும் இல்லாமல் வசூலில் தொடர் சாதனை என்று தான் சொல்லணும் சமீபத்தில் வெளியான எமன் திரைப்படம் மிக பெரிய வெற்றி மட்டும் இல்லாமல் வசூலிலும் பெரிய வெற்றியை தந்துள்ளது என்று தான் சொல்லணும் தமிழ் மட்டும் இல்லை தெலுங்கிலும் இந்த படம் மிக பெரிய வெற்றியை தந்துள்ளது என்று தான் சொல்லணும் இவரின் பிச்சைக்காரன் படம் தெலுங்கில் 75 கோடி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது. எமனுக்கு அடுத்து இவர் யார் படத்தில் நடிக்க போகிறார் என்று ஒரு மிக பெரிய கேள்விக்குறியாக இருந்தது அதற்கு விடை இதோ
பிரபல இயக்குநரான சீமான் தற்போது அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். `பாஞ்சாலங்குறிச்சி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சீமான் இதுவரை 5 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக அவர் இயக்கத்தில் மாதவன் நடித்த அதிரடி திரைப்படமான `தம்பி’ வெளியானது. அதன் பின்னர் அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் சீமான் நாம் தமிழர் கட்சியையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டில் விஜய்யை வைத்து `பகலவன்’ என்ற படத்தை சீமான் இயக்கவிருந்தார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் அப்படத்திற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், அந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகாமல் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், `பகலவன்’ படத்தின் பணிகளை சீமான் மீண்டும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு பதிலாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
