Sunday, April 26
Shadow

விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் பிரபல நடிகரும் இயக்குனரும் கருத்து

விஜய் ஒரு சிறந்த நடிகர் மற்றும் மிக சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்றும் சொல்லாலம் காரணம் பல மு உதாரணங்கள் சொல்லலாம் எடுத்துகாட்டுக்கு சமீபத்தில் அனிதா விஷயம் ஒன்று போதும் அது மட்டும் இல்லாமல் விஜய் தன ரசிகர்களை மிகவும் மதிக்க கூடியவர் இவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று இவரின் ரசிகர்களுக்கும் ஆசை அதோடு விஜய்க்கும் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் தான் மக்கள் இயக்கம் என்று ஆரம்பித்தார். தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு சிறந்த தலைவர் வேண்டும் என்ற கட்டாயத்தில் தமிழகம் உள்ளது.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக அரசை மக்களும் கண்டுக்கொள்வதில்லை, அரசும் மக்களை கண்டுக்கொளவதில்லை. இதற்கிடையே, இந்த அரசு கலைகிறதோ அல்லது நான்கு வருடம் ஆண்டு முடிக்கிறதோ, அடுத்த தேர்த்தல் வந்தால், நிச்சயம் அதிமுக-வுக்கு வாக்குகள் இல்லை, என்பதை இப்போதே தீர்மாணித்துவிட்ட தமிழக மக்கள், தங்களது அடுத்த முதல்வராக சிலரை தேர்வு செய்து வைத்துள்ளனர்.

இந்த சிலரில் சினிமா பிரபங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் முக்கிய இடத்தில் இருக்க, இவர்களுக்கு போட்டியாக விஷாலும் வருவார் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஜெயலலிதா முதல்வராக இருந்த போதே தனது அரசியல் ஆசையை வெளிக்காட்டிய விஜய் பிறகு அமைதியானாலும், தற்போதும் சமூக பிரச்சினைகளில் தலையீட்டு தன்னால் முடிந்ததை செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றது, மாணவி அனிதா குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் கூறியது, பண இழப்பு மதிப்பு கருத்து வெளிப்படையாக தனது கருத்தை சொன்னது, என்று விஜயின் அதிரடி தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராக வந்தால் நன்றாக இருக்கும், என்று இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.ஜே.சூர்யா, “நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்பது சட்டமா? நடிகர்கள் அரசியலுக்கு வந்ததற்கு ஏராளமான சாட்சிகள் உள்ளன. இது சுதந்திர இந்தியா, இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்குவ் அரலாம். என்னை பொருத்தவரை நடிகர் விஜய் முதல்வராக வரலாம். கொடுக்கப்பட்ட பணிகளை அவர் கமிட்மெண்ட்டாகவே செய்கிறார். அதையும் தாண்டி அவர் நல்லெண்ணம் கொண்டவர். எவன்வே அவர் முதல்வரானால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply