`தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் நாயகிகளாக ரகுல் பிரீத்திசிங், சாய் பல்லவி நடிக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் துவங்கிய இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடிக்கிறார்.
இவர் விஜய் நடிப்பில் வெளியான பைரவா படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது.