Friday, February 7
Shadow

ரஜினி திட்டம்போட்ட நாளில் களமிறங்கும் கமல்

கமல்ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் `விஸ்வரூபம்’. இரு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது விஸ்வரூபம்-2 ரிலீசாக இருக்கிறது.

கிராபிக்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் தற்போது துவங்கி இருக்கிறது. நடிகர் கமல்ஹாசனும் டப்பிங் பணிகளில் பிசியாகி இருக்கிறார்.

கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை, ஏப்ரலில் ரிலீஸ் செய்ய கமல் திட்டமிட்டுள்ளாராம். அதுவும் ரஜினியின் `2.0′ படம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த ஏப்ரல் 27-ஆம் தேதியே வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் தாமதமாவதால் `2.0′ ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த இடத்தை கமல் நிரப்ப முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.

Leave a Reply