Tuesday, September 10
Shadow

விஜய்யுடம் போட்டி போடும் விஷால்

விஜய்யை மற்ற எந்த ஹீரோக்கள் போட்டியாக எடுத்துக்கொள்கிறார்களோ இல்லையோ விஷால் தன்னிச்சையாகவே எடுத்துக் கொண்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் ரசிகர் மன்ற பொறுப்பாளரை தன் பக்கம் இழுத்தார். அந்த பொறுப்பாளரோடு பல விஜய் ரசிகர் மன்றங்களும் கூண்டோடு விஷால் பக்கம் வந்தன.

விஜய் படத்துக்கு போட்டியாகவும் படம் வருகிறாற்போல் பார்த்துக்கொள்வார். இப்போது விஜய்யின் ஹிட் படமான தெறி டீமை அப்படியே தனது அடுத்த படமான இரும்புத்திரை படத்துக்குப் பயன்படுத்தவிருக்கிறார் இரும்புத்திரை படத்தை மித்ரன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

படத்துக்கு ஒளிப்பதிவு ஜார்ஜ்சி.வில்லியம்ஸ், எடிட்டிங் ரூபன், கலை முத்துராஜ் இது அப்படியே தெறி படத்தின் டெக்னிக்கல் டீம். இது மட்டுமில்லாமல் தெறி நாயகி சமந்தாவை படத்தின் கதாநாயகியாக்கியுள்ளார். சரிதான்…!

விஜய் ரசிகர்கள் பட்டாளத்துடன் விஷால் போட்டி என்பது காமெடி மாதிரிதான் இருக்கு. விஷாலுக்கு இப்படிலாம் சொல்லி யார் தூண்டிவிடரானு தெரில.

Leave a Reply