
மாவீரன் கிட்டு பேருக்கு தகுந்தார் போல கம்பீரமான நடிப்பு அனைவருக்கும் படத்தில் ஒரு தமிழ் இனத்தின் கதையை நன்றாகவே எடுத்து உள்ளார் இயக்குனர்
இயக்குனர் சுசீந்திரன் வரலாற்றில் அந்த ராஜா பாட்டையை தவிர எல்லாம் சூப்பர் தான் என்று இந்த படத்தையும் பார்த்து மக்கள் கூறி கிட்டுவின் வெற்றியை உறுதி செய்து விட்டனர்
உண்மையில் இம்மான் இசை அழகா படம் முழவதும் உள்ளது நல்ல ஆதரவு படத்திற்கு இம்மானின் பின்னணி இசை இயக்குனர் பார்த்திபன் அவர்களின் நடிப்பு உச்ச கட்டம்
கதை
ஊரில் கீழ் ஜாதியை சார்ந்த ஒருவர் இறந்தால், ஊருக்குள் கொண்டு வரக்கூடாது, என கூற பார்த்திபன் இதை எதிர்த்து போராடுகிறார்.
இந்நிலையில் விஷ்ணு கீழ் ஜாதியை சார்ந்தவராக இருந்து படிப்பில் சிறந்து விளங்கி, மாவட்ட கலேக்ட்டர் ஆகவேண்டும் என்று எண்ணுகின்றார்.
ஆனால், வேண்டுமென்றே இவரை ஒரு கொலை வழக்கில் ஒரு சிலர் சதியால் கைது செய்ய, பின் ஜாமினில் வெளியே வருகிறார். அதை தொடர்ந்து போலிஸான ஹரிஸ் உத்தமன், விஷ்ணுவை ஒரு பிரச்சனையில் ஜெயிலில் கொண்டு சென்று அடித்துவிடுகிறார்.
இதன் பிறகு விஷ்ணு மாயமாகிறார், அவர் எங்கு இருக்கிறார் என்று ஊரே தேட ஆரம்பிக்கின்றது, பார்த்திபனும் இனி அமைதியாக இருந்தால் வேலைக்கு ஆகாது, தன் போராட்டத்தை தொடங்க, இறுதியில் கிட்டு கிடைத்தாரா? பார்த்திபன் போராட்டம் வெற்றி பெற்றதா? என்பதே மீதிக்கதை.
விஷ்ணுவின் இதுவரை காதல் காமெடி என்று அலட்டி கொள்ளாமல் இருந்த விஷ்ணு விஷால் இந்த படத்தில் நடிப்பில் அருமையான முன்னேற்றம் காரணம் இயக்குனர் சுசீந்திரன்அது மட்டும் இல்லை படத்தின் கதை களமும் தான் இனி வரும் காலத்தில் நடிக்கும் படங்கள் இதே மாதிரி நடிப்பிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தமிழுக்கு இன்னும் ஒரு சிறந்த நடிகர் கிடைத்தார் என்ற பெருமை .
தமிழுக்கு கிடைத்த இன்னும் ஒரு சிறந்த நடிகை என்றால் அது ஸ்ரீ திவ்யா என்று சொல்லணும் இந்த கதைக்கு ஏற்ப நடிகை என்று தான் சொல்லணும் ஒரு கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து இருக்கிறார் . என்று சொல்லணும் .
இயக்குனர் சுசீந்திரன் எப்போதும் போல ஒரு சிறந்த படத்தை கொடுத்துள்ளார் . எப்பவும் போல சண்டை அதிரடி இல்லாமல் சோசியலிசம் கையில் எடுத்து அதை மிகவும் அருமையாக இயக்கியுள்ளார் . அதை விட சிறந்த திரைகதை என்றும் சொல்லணும் .
படத்தின் மிக பெரிய பிளஸ் என்றால் அது இம்மான் இசை என்று சொல்லணும் பாடல்களும் சரி படத்தின் திரைக்கதைக்கு எற்ப பின்னணி இசை மேலும் படத்தின் கதைக்கும் திரைகதைக்கும் பக்கபலம் என்று தான் சொல்லணும்
பார்த்திபன் படத்தின் முதுகுஎலும்பு என்று சொல்லணும் படத்தின் முக்கிய பாத்திரம் தனக்கு கொடுத்துள்ள கதாபாத்திரத்தை மிகவும் உணர்ந்து அவரின் நக்கல் நையாண்டி இதெல்லாம் இல்லாமல் அருமையாக நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
அதே போல் விஷ்ணுவின் நண்பர்களாக வருபவர்களும் தங்கள் பங்கை அருமையாக வெளி படுத்தியுள்ளனர் .
ஹரிஸ் உத்தமன், பார்த்திபன் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு ஹரிஸ் உத்தமன் என்று சொல்லணும் சப் இன்ஸ்பெக்டராக வந்து கொடுருரமான வில்லனாக வளம் வருகிறார் .
கிளைமாக்ஸ் இணைவோம் இணைவோம் பாடல்களை படமாக்கிய விதம். அருமையோ அருமை!!
மொத்தத்தில் மாவீரன் கிட்டு நல்லவன் ரசிக்க வைக்குறான் RANK (5/4.25/)
