விஸ்வாசம் – திரைவிமர்சனம் (தரமான சம்பம்) Rank 3.5/5

share on:

விஸ்வாசம்“ திரைவிமர்சனம் : தூக்குதுரை எல்லாரையும் தூக்கிட்டாரா?

சத்யஜோதி பில்ம்ஸ் சார்பாக அஜித் சிவா கூட்டணியில் வரும் படம் இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்டப் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் யோகிபாபு,ரோபோஷங்கர், தம்பிராமையா,ஜெகபதி பாபு,மற்றும் பலர் நடிப்பில் வெற்றி ஒளிப்பதிவில் இமான் இசையில் சிவா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்

விஸ்வாசம் மக்களின் எதிர்பார்ப்பு மட்டும் இல்லை சினிமா உலகின் எதிர்பார்ப்பும் சிவா அஜித் கூட்டணியின் நாலாவது படம் போன பலம் விவேகம் தோல்வி இருந்தும் சிவாவுக்கு படம் வெற்றியை சிவா கொடுப்பாரா இல்லை மீண்டும் சோதனையோ தருவாரா என்பதெல்லாம் கேள்வி குறி இதற்கான விடை

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விசுவாசம்… தல அஜித் ரசிகர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருந்ததற்கு விசுவாசம் திரைப்படம் ரசிகர்களை திருப்திபடுத்தியதா என்பதை தற்போது பார்ப்போம்… தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி எனும் கிராமத்தில் அமைதியாக குடும்பம் நடத்தி வருகிறார் அஜித்… ஆனால் படம் தொடங்கும்போதே சால்ட் அண்ட் லுக் முடியுடன் இருக்கும் அஜித்துடன் தான் கதை தொடங்குகிறது… தன் மகள் மற்றும் மனைவிக்கு பிரச்சனை ஏற்படும் போது அதனை தல அஜித் எப்படி தடுக்கிறார்? மற்றும் வில்லனுக்கும் தல அஜித் குடும்பத்திற்கும் என்ன பிரச்சனை? எதற்காக வில்லன் தல அஜித்தின் குடும்பத்தை கொள்ள நினைக்கிறார்? தல அஜித் என்ன அப்படி செய்தார் என்பதே விஸ்வாசம் படத்தின் கதை… இதனை சிறுத்தை சிவா அழகாகவும் காரசாரமாகவும் சொல்லியுள்ளார்… இன்னும் சொல்ல வேண்டுமானால் விவேகம் படத்தால் ஏற்பட்ட தோல்வியை தன் மனதில் வைத்துக் கொண்டு மிக வெறித்தனமான கதையை எழுதி தல ரசிகர்களை சந்தோஷக் கடலில் நீந்த விட்டுள்ளார் சிறுத்தை சிவா…

இந்த படத்தை பார்க்கும்போது தல அஜித்தை நீண்ட வருடங்களுக்கு பிறகு நகைச்சுவை உணர்வுடன் பார்க்கமுடிகிறது… இது தல அஜித் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது… மேலும் இதுபோன்று நகைசுவையாகவும் அஜித் அடிக்கடி நடிக்க வேண்டும் என்றும் பல ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் நயன்தாரா இந்த படத்தில் நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்… நயன்தாராவின் காதல் காட்சிகளும் சென்டிமென்ட் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.அஜித் நயன்தாரா ஜோடி அப்பா படத்தில் கண்கொள்ளாக்காட்சி என்று தான் சொல்லணும்

மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த விவேக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமய்யாவின் நகைச்சுவையும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது… டி இமானின் இசையும் அஜித் ரசிகர்களை தியேட்டரில் விசில் அடித்து ஆட வைக்கிறது… குறிப்பாக அடிச்சு தூக்கு பாடலும், வேட்டி கட்டு பாடலும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்து உள்ளது… ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது விசுவாசம் திரைப்படம் குடும்ப ஆடியன்ஸ் கவரும் விதமாக இயக்குனர் சிவா எடுத்துள்ளார்… நீண்ட வருடத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் தல அஜித் அதிக நகைச்சுவை காட்சிகளில் நடித்து உள்ளது கூடுதல் சிறப்பம்சம்..

மொத்தத்தில் விஸ்வாசம் குடும்பகாவியம் Rank 3.5/5