Thursday, April 25
Shadow

அஜித்தின் விவேகம் டீசெர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதி உங்களுக்காக

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிவரும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. கட்டுமஸ்தான உடம்புடன் அஜித் தோன்றிய அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் விஜய்யின் பைரவா சாதனையை முறியடித்தது. கிட்ட தட்ட விஜய்யின் பைரவா 10,000 ரீ ட்விட் வாங்கியது ஆனால் அஜித்தின் விவேகம் 18000 வாங்கி சாதனை படைத்தது அது மட்டும் இல்லாமல் அந்த போஸ்டர் கிண்டல் செய்தனர் அது கிராபிக்ஸ் என்று அதற்கு நேற்று பதில் கொடுத்தார் இயக்குனர் சிவா படம் வெளியாகும் பொது தெரியும் உண்மை அதற்கு எவ்வளவு கஷ்டம் பட்டுள்ளார் அஜித் என்று ஆனால் அஜித் ரசிகர்கள் கிண்டலை பற்றி கவலை படவில்லை மற்றவர்களை பற்றி நமக்கு என்ன என்று மிகவும் தெம்பாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு அடுத்த தெம்பு தான் இப்ப வர செய்தி.

இந்த உற்சாகத்துடனேயே அஜித் பிறந்தநாளான மே 1-ந் தேதி இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஜுன் முதல் வாரத்தில் இப்படத்தின் ஆடியோவையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Leave a Reply