Wednesday, October 28
Shadow

அஜித்தின் விவேகம் தயாரிப்பாளரும் இயக்குனர் சிவாவுக்கும் மோதல்

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதைதொடர்ந்து ரசிகர்களிடம் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜனவரியில் முடியவேண்டிய படம் இன்னும் முடியவில்லை.மேலும் சொன்னதை விட பட்ஜெட் எகிறிவிட்டதாம்.

இதனால் கடுப்பான தயாரிப்பாளர், விஷயத்தை அஜித்திடம் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அஜித்தோ, ” இதிலெல்லாம் நான் தலையிட மாட்டேன். நீங்களே இயக்குனரிடம் பேசிக்கொள்ளுங்கள்” என கூறிவிட்டாராம்.

இதனால் மனம் உடைந்த தயாரிப்பாளர் இயக்குனர் சிவாவிடம் சொல்ல போக சிவா மற்றும் தயாரிபாலருக்கும் சின்ன கசமுசா ஏற்பட்டதாகவும் பின்னர் அஜித் மீண்டும் தலையிட்டு பிரச்சனையை விளக்கி உள்ளார். இருந்தும் தயாரிப்பாளர் வட துருவமாகவும் இயக்குனர் தென் துருவமாக தா இருகிறார்கள் . என்றும் கிசு கிசுகிரார்கள்.

Leave a Reply