Wednesday, September 16
Shadow

கேப்டன் சினி கிரியேஷன்ஸின் 9வது படத்திற்கு பிரபல இயக்குநர் திரு ஒப்பந்தம்!

 

கேப்டன் சினி கிரியேஷன்ஸின் 9வது படத்திற்கு பிரபல இயக்குநர் திரு ஒப்பந்தம்!

சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகில் தரமான மற்றும் வித்தியாசமான படைப்புகளை வழங்கி வரும் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தனது ஒன்பதாவது திரைப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கத் தயாராகியுள்ளது.
இந்த புதிய திரைப்படத்தை, ‘சமர்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘நான் சிவப்பு மனிதன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கி தனக்கென தனி முத்திரை பதித்த இயக்குநர் **** இயக்குகிறார். ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் கொண்ட அவரது இயக்கத்தில் உருவாகும் இந்தப் புதிய படம் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர் **** நடிக்கிறார். தனது முந்தைய படங்களில் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், இந்தப் படத்தின் மூலம் மேலும் ஒரு புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார்.
படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் குழுவினரின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதேபோல், படத்தின் தலைப்பு, முதல் பார்வை (First Look), படப்பிடிப்பு தொடக்க விழா உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்களும் விரைவில் வெளியாக உள்ளன.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சிக்கும், எப்போதும் போல தங்களின் அன்பான ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்குமாறு அனைத்து ஊடக நண்பர்களையும் அன்புடன்

 

 

Captain Cine Creations Announces Its 9th Film; Acclaimed Director Thiru on Board, Shanmuga Pandian to Play the Lead

Chennai: Captain Cine Creations, known for delivering quality and distinctive films in Tamil cinema, has officially announced its ninth production, which promises to be a grand cinematic venture.

The upcoming film will be directed by acclaimed filmmaker Thiru, who has earned recognition for successful films such as Samar, Theeradha Vilaiyattu Pillai, and Naan Sigappu Manithan. Renowned for blending action, family emotions, and engaging storytelling, Thiru’s latest collaboration has already generated considerable excitement among cinema enthusiasts.

The film will feature Shanmuga Pandian in the lead role. Having impressed audiences with his performances in his previous films, the actor is expected to showcase a fresh and exciting new dimension in this project.

The makers have also revealed that details regarding the rest of the cast, leading actresses, music composer, cinematographer, and other key members of the technical crew will be announced soon. The film’s official title, first-look poster, launch event, and other major updates are also expected to be unveiled in the coming weeks.

Captain Cine Creations has expressed its gratitude to the media fraternity and requested continued support and encouragement for its latest ambitious venture, as it gears up to bring another promising entertainer to audiences.