
‘அரசன்’ படப்பிடிப்பில் வேகம் கூட்டும் வெற்றிமாறன் – சிலம்பரசன் – அனிருத் கூட்டணி!
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சிலம்பரசன் TR நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு.
தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பில் எந்தவிதத் தாமதமும் ஏற்படாத வகையில், திட்டமிட்டபடி பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மூன்று முன்னணி கலைஞர்களும் ஒரே இடத்தில் இணைந்திருக்கும் இந்த தருணம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தை மையமாகக் கொண்டு ‘அரசன்’ உருவாகி வருவதாக எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சிலம்பரசன் TR உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சிலம்பரசன் TR – வெற்றிமாறன் கூட்டணியுடன் அனிருத்தும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இந்தக் கூட்டணி எப்படி திரையில் புதிய அனுபவத்தை உருவாக்கப் போகிறது என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ‘அரசன்’ தொடர்பான அடுத்தடுத்த முக்கிய அறிவிப்புகள் மற்றும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படப்பிடிப்புத் தளத்தில் நிலவும் வேகமும், முன்னணி கலைஞர்களின் கூட்டணியும் ‘அரசன்’ படத்திற்கான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Silambarasan TR, Vetri Maaran & Anirudh’s ‘Arasan’ Picks Up Pace in Chennai!
The shooting of ‘Arasan’, starring Silambarasan TR, directed by Vetri Maaran and produced by Kalaippuli S. Thanu, is progressing at a brisk pace in Chennai.
The team is currently shooting at a grand set erected in Tharamani, Chennai. The production is moving ahead as planned, with the makers maintaining a steady pace without any interruptions or delays.
Meanwhile, Silambarasan TR, director Vetri Maaran and music composer Anirudh were seen together on the sets, discussing various aspects of the film and its ongoing work. The coming together of this much-awaited trio has further fuelled curiosity and excitement surrounding ‘Arasan’.
Set against a storyline connected to the ‘Vada Chennai’ universe, ‘Arasan’ features Silambarasan TR in the lead, along with Andrea, Samuthirakani, Kishore and several others in important roles.
The collaboration of Silambarasan TR, Vetri Maaran and Anirudh has already emerged as one of the biggest talking points surrounding the film. With the shoot progressing rapidly, expectations among fans continue to rise with every passing day.
The makers are expected to unveil more updates about ‘Arasan’ in the coming days, adding to the anticipation surrounding this highly awaited collaboration.
