
தமிழ் இசைக்கு புதிய உலகளாவிய முகவரி: தீ – லாரா ராஜ் கூட்டணியில் ‘வாரி வாரி’ ரீமிக்ஸ் வெளியீடு
தமிழ் இண்டி இசையின் தனித்துவமான குரலாக சர்வதேச இசை ரசிகர்களிடமும் கவனம் பெற்றிருக்கும் பாடகி தீ (DHEE), தற்போது உலக பாப் இசை அரங்கில் பிரபலமான KATSEYE குழுவின் லாரா ராஜ் (Lara Raj) உடன் இணைந்து ‘வாரி வாரி – VARI VARI’ பாடலின் புதிய ரீமிக்ஸ் பதிப்பை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘வாரி வாரி’ தமிழ் இண்டி பாடல், அதன் தனித்துவமான இசை அமைப்பு மற்றும் தீயின் குரலால் இசை ரசிகர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து தயாரித்த இந்தப் பாடலுக்கு, பாடலாசிரியர் விவேக் வரிகளை எழுதியிருந்தார்.
இந்தப் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘வாரி வாரி’ புதிய சர்வதேச பரிமாணத்தை எட்டியுள்ளது. KATSEYE மூலம் உலகளாவிய பாப் இசை ரசிகர்களிடையே அறிமுகமான லாரா ராஜ், பாடகி தீயுடன் இணைந்து இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பதிப்பில் குரல் கொடுத்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த ரீமிக்ஸ் பாடலில், 808 கிருஷ்ணா இணை தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். தமிழ் இசையின் வேர்களையும், சமகால உலக பாப் இசையின் ஒலியையும் இணைக்கும் முயற்சியாக இந்த புதிய பதிப்பு உருவாகியுள்ளது.
குறிப்பாக, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரு பெண் கலைஞர்கள் சர்வதேச இசை மேடையில் ஒன்றிணைந்திருப்பது இந்தப் பாடலுக்கு கூடுதல் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து இசை ரசிகர்களை இணைக்கும் ஒரு கலாச்சார சந்திப்பாகவும் இந்த கூட்டணி பார்க்கப்படுகிறது.
தீ மற்றும் லாரா ராஜ் ஆகியோரின் குரல்கள் இணைந்துள்ள ‘வாரி வாரி – VARI VARI’ ரீமிக்ஸ், தமிழ் இண்டி இசைக்கு உலகளாவிய இசைத் தளத்தில் கிடைத்துள்ள புதிய கவனத்தை பிரதிபலிப்பதோடு, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்களிலும் இடம்பிடித்து வருகிறது.

DHEE and Lara Raj Join Forces to Take ‘VARI VARI’ to a Global Audience
Tamil independent music is finding a new global expression with singer DHEE joining forces with Lara Raj of global pop group KATSEYE for a special remix of the popular Tamil indie track, ‘VARI VARI’.
Originally released as a Tamil indie song, ‘VARI VARI’ quickly captured the attention of music lovers with its distinctive sound and DHEE’s signature vocals. The original track was composed and produced by acclaimed music composer Santhosh Narayanan, with lyrics written by Vivek.
Following the success of the original, ‘VARI VARI’ now takes on an exciting new international dimension. DHEE has collaborated with Lara Raj, the American pop artist and member of KATSEYE, for the remix version of the song, bringing together two distinctive voices from different corners of the global music landscape.
The remix has been composed by Santhosh Narayanan, with 808 Krishna serving as co-producer. Blending the roots of Tamil music with a contemporary global pop sensibility, the new version presents ‘VARI VARI’ in a fresh musical avatar.
What makes this collaboration particularly significant is the coming together of two female artists of Tamil heritage on an international music platform. Beyond being a musical collaboration, the track represents a cultural connection that transcends geographical boundaries and brings diverse musical influences together.
With the voices of DHEE and Lara Raj at its heart, the ‘VARI VARI’ remix reflects the growing global reach of Tamil independent music. The collaboration has already begun attracting listeners across the world, earning a place on playlists and introducing the sound of Tamil indie music to a wider international audience.
