
37 பேரின் நடிப்பை ஒரே நேரத்தில் பதிவு செய்து கின்னஸ் சாதனை – ‘ராக்கா’ படக்குழு புதிய வரலாறு!
அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியின் பிரம்மாண்ட படைப்பில் இந்திய சினிமாவின் தொழில்நுட்ப சாதனை
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’, படப்பிடிப்பு மற்றும் திரைப்படத் தொழில்நுட்பத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
திரைப்பட உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் Real-Time Motion Capture தொழில்நுட்பத்தில், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்களின் நடிப்பைப் பதிவு செய்ததற்காக ‘ராக்கா’ திரைப்படம் Guinness World Records அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பிரத்யேக Motion Capture படப்பிடிப்பில், 37 கலைஞர்கள் ஒரே நேரத்தில், ஒரே Capture Volume-க்குள் நிகழ்நேரத்தில் பதிவு செய்யப்பட்டனர். இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் செப்டம்பர் 15, 2026 அன்று வழங்கப்பட்டது.
அல்லு அர்ஜுன் – அட்லீயிடம் வழங்கப்பட்ட கின்னஸ் சான்றிதழ்
இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் Guinness World Records சான்றிதழ், படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர் வழங்கினார்.
படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் கலந்து கொண்ட நெருக்கமான நிகழ்வில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
“ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் பெருமையான தருணம்” – அல்லு அர்ஜுன்
இந்த சாதனை குறித்து அல்லு அர்ஜுன் பேசுகையில், சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தும் இந்த முயற்சி தங்களது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமை அளிப்பதாகத் தெரிவித்தார்.
தனது இயக்குநர் அட்லீயின் தொலைநோக்குப் பார்வை மற்றும் வழிகாட்டுதலுடனும், படக்குழுவினரின் கடின உழைப்புடனும் இந்த சாதனை சாத்தியமானதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய மிகப்பெரிய கனவுடன் உருவாகும் திரைப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
“கனவு கண்டால் சாத்தியமற்றதும் சாத்தியமாகும்” – அட்லீ
இயக்குநர் அட்லீ தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும்போது, சிறுவயதில் கின்னஸ் உலக சாதனைகள் குறித்து ஆச்சரியத்துடன் கேள்விப்பட்டதாகவும், ஒருநாள் தாங்களே ஒரு சாதனையை உருவாக்குவோம் என்று நினைத்ததில்லை என்றும் தெரிவித்தார்.
ஒரே படப்பிடிப்பில் 37 Motion Capture Assets-ஐ ஒருங்கிணைத்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது கனவு போன்ற உணர்வை அளிப்பதாகக் கூறிய அவர், பெரிய கனவுடன் முழு நம்பிக்கையோடு குழுவாக உழைத்தால் சாத்தியமற்றதாகத் தோன்றும் விஷயங்களையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த முயற்சி ஒரு உதாரணம் என குறிப்பிட்டார்.
இந்த சாதனைக்காக தன்னுடன் இணைந்து பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
4 வயது குழந்தை முதல் 70 வயது வரை – ஒரே Capture Volume-ல் 37 பேர்!
‘ராக்கா’ படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த Motion Capture பணியின் தனிச்சிறப்பு அதன் அளவிலும் சிக்கலான தொழில்நுட்பத்திலும் அமைந்துள்ளது.
4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை 37 கலைஞர்கள், ஒரே அமர்வில் ஒரே நேரத்தில் நிகழ்நேரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கலைஞரின் தனித்துவமான அசைவுகள் மற்றும் நடிப்பை மற்றவர்களின் இயக்கங்களால் பாதிக்கப்படாமல் துல்லியமாகப் பதிவு செய்வதே இந்த முயற்சியின் முக்கிய சவாலாக இருந்துள்ளது.
92 கேமராக்கள்… ஒருங்கிணைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம்!
இந்த உலக சாதனை முயற்சிக்காக படக்குழு பிரத்யேக Motion Capture pipeline மற்றும் workflow-ஐ உருவாக்கியுள்ளது.
மொத்தம் 92 Optical Motion Capture Cameras பயன்படுத்தப்பட்ட இந்தப் பணியில், Capture, Calibration, Networking, Synchronisation, Real-Time Unreal Visualisation, Witness Cameras, Facial Capture உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.
37 கலைஞர்களின் அசைவுகளையும் ஒரே நேரத்தில் துல்லியமாகப் பதிவு செய்து, அவற்றை நிகழ்நேரத்தில் கண்காணித்து, பின்னர் பயன்படுத்தக்கூடிய வகையில் தரவுகளைப் பாதுகாப்பது இந்த முயற்சியின் முக்கிய தொழில்நுட்பப் பணியாக அமைந்தது.
படத்தின் பிரம்மாண்டத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய Motion Capture workflow, ‘ராக்கா’ திரைப்படத்தின் VFX பணிகளுக்கு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது.
பல துறைகளின் கூட்டு முயற்சியில் உருவான சாதனை
இந்த கின்னஸ் சாதனையின் பின்னணியில் சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பு, இயக்குநர் அட்லீயின் காட்சிப்படுத்தல் பார்வை, அல்லு அர்ஜுனின் அர்ப்பணிப்பு, Apple Art Studio-வின் தொழில்நுட்ப பங்களிப்பு, VFX குழுவின் மேம்பட்ட தொழில்நுட்பப் பணிகள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒருங்கிணைந்த உழைப்பு ஆகியவை முக்கிய பங்கு வகித்துள்ளன.
ஒரு திரைப்படத்திற்கான காட்சியை உருவாக்கும் வழக்கமான முறையைத் தாண்டி, ஒரே நேரத்தில் 37 பேரின் நடிப்பை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் அளவுக்கு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலக கவனத்தை ஈர்க்கும் இந்திய சினிமாவின் தொழில்நுட்பப் பயணம்
‘ராக்கா’ படத்தின் இந்த கின்னஸ் உலக சாதனை, திரைப்படத்தின் பிரம்மாண்டத்தை மட்டுமல்லாமல், இந்தியாவில் உருவாகி வரும் நவீன திரைப்படத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தை இந்திய படைப்பாளிகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து கையாள முடியும் என்பதை இந்த சாதனை எடுத்துக்காட்டுகிறது.
அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ‘ராக்கா’, திரைக்கு வருவதற்கு முன்பே அதன் உருவாக்கப் பணிகளின் மூலம் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. கின்னஸ் உலக சாதனை அங்கீகாரத்துடன், இந்திய சினிமாவின் பிரம்மாண்டமான படைப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.

‘RAAKA’ Makes Guinness World Records History with 37-Person Real-Time Motion Capture
Allu Arjun–Atlee’s Magnum Opus Achieves a Major Milestone in Cinematic Technology
Icon Star Allu Arjun’s upcoming magnum opus ‘RAAKA’, directed by V. Arunkumar (Atlee) and produced by Sun Pictures’ Kalanithi Maran, has achieved a remarkable milestone even before its theatrical release.
The film has earned a Guinness World Records title for the “Most People Motion-Captured in Real-Time,” after successfully capturing the performances of 37 artists simultaneously in real time.
The record was achieved during a specially conducted motion-capture session in February 2026, marking a significant technological achievement for Indian cinema. The feat was officially recognised by Guinness World Records on September 15, 2026.
Guinness Certificate Presented to Allu Arjun and Atlee
The official Guinness World Records certificate was presented to Icon Star Allu Arjun and director Atlee by Swapnil Dangrikar, Senior Adjudicator, Guinness World Records.
The certification ceremony was held in the presence of key members of the film’s cast and technical crew.
Allu Arjun: “A Proud Moment for the Entire Team”
Speaking about the achievement, Allu Arjun expressed his pride in the team’s accomplishment and said that the record represents an effort to push the boundaries of cinema and establish a new benchmark on a global scale.
He credited director Atlee’s vision and guidance, along with the extraordinary efforts of the entire team, for making the achievement possible. He also expressed his gratitude to Sun Pictures for continuously supporting a project of such scale and ambition.
Atlee: “Sometimes the Impossible Becomes Possible”
Director Atlee recalled how, while growing up, Guinness World Records always fascinated him, without ever imagining that he would one day be part of a record-breaking achievement himself.
Bringing together 37 motion-capture assets in a single shoot and receiving official recognition for the feat has been a surreal and humbling experience, he said.
According to Atlee, the achievement stands as an example of how ambitious dreams can become reality when a team works together with complete belief and commitment. He expressed his heartfelt gratitude to everyone who believed in the vision and contributed to making it possible.
From a 4-Year-Old Child to a 70-Year-Old: 37 Performers Captured Together
One of the most notable aspects of the motion-capture exercise was the diverse group of performers involved.
A total of 37 performers, ranging from a 4-year-old child to a 70-year-old, were captured simultaneously in real time during a single session.
The challenge was to accurately record each performer’s individual movements and performances within the same capture volume while ensuring that the integrity and uniqueness of every performance remained intact.
92 Optical Motion-Capture Cameras Deployed
To execute this ambitious Guinness World Records attempt, the film’s VFX team developed a dedicated motion-capture pipeline and workflow tailored specifically to the scale and technical requirements of ‘RAAKA’.
As many as 92 optical motion-capture cameras were deployed for the record attempt.
The technical setup integrated multiple advanced systems, including capture, calibration, networking, synchronisation, real-time Unreal visualisation, witness cameras and facial capture, along with specialised technical teams.
The coordinated system enabled the team to capture and monitor the performances of all 37 participants simultaneously and accurately.
A Collaborative Achievement
The record-breaking feat brings together the scale and ambition of Sun Pictures, Atlee’s creative vision, Allu Arjun’s commitment to pushing the boundaries of performance, Apple Art Studio’s technical expertise, the film’s advanced VFX workflow and the collective efforts of its extensive technical team.
The specially developed motion-capture workflow is expected to play a significant role in the film’s extensive VFX and digital production process.
A Significant Milestone for Indian Cinema
Beyond the Guinness World Records title, the achievement represents an important milestone in the technological evolution of Indian filmmaking.
The successful execution of such a complex real-time motion-capture setup demonstrates the capabilities of Indian creative and technical teams in handling large-scale, advanced filmmaking technology.
With ‘RAAKA’, the Allu Arjun–Atlee collaboration has already created global attention through its ambitious production process. The Guinness World Records recognition further adds to the anticipation surrounding the film, which is being mounted on a grand scale by Sun Pictures.
The achievement marks another significant moment for Indian cinema on the global stage, showcasing the creative ambition, technical expertise and possibilities of contemporary Indian filmmaking.
