Wednesday, October 28
Shadow

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட அறை… அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? – பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’!

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்ட அறை… அதன் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? – பிரசாந்த் நீல் வழங்கும் ‘418’!

அக்டோபர் 23 முதல் நான்கு மொழிகளில் வெளியாகும் திகில் திரைப்படம்!

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதி… அந்த விடுதியில் இருக்கும் 418-வது அறை… அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மங்கள்! அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சம்பவங்கள், மூடநம்பிக்கைகள், அமானுஷ்ய நிகழ்வுகள் எனப் பல கேள்விகளை எழுப்பும் திகில் கதையுடன் திரைக்கு வருகிறது ‘418’ திரைப்படம்.

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்கும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி தயாரித்துள்ளனர். கீர்த்தன் நடகௌடா இயக்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒரு குறிப்பிட்ட அறையைச் சுற்றி நீண்ட காலமாகத் தொடரும் மர்மமும், அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் காத்திருக்கும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் சேர்க்கின்றன. அறிவியல் ரீதியாக விளக்க முடியாத நிகழ்வுகளும், மனிதர்களின் நம்பிக்கைகளும் மோதும் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களை இறுதிவரை இருக்கையில் அமர வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வெங்கி ஜிஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு, உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பல்வேறு கதைக்களங்களிலும் திரைப்படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்த முறை மர்மம் மற்றும் திகில் கலந்த கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வலுவான திரைக்கதையையும், திரையரங்குகளில் ரசிக்கக்கூடிய அனுபவத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘418’, திகில் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 ஆண்டுகளாக அந்த அறை ஏன் பூட்டப்பட்டுள்ளது? அதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள முயற்சிப்பவர்களுக்கு என்ன நடக்கும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அக்டோபர் 23 முதல் திரையரங்குகளில் காணலாம்.

தொழில்நுட்பக் குழு

  • வழங்குபவர்: பிரசாந்த் நீல்
  • தயாரிப்பாளர்கள்: ரவி சங்கர் யலமஞ்சிலி, நவீன் யெர்னேனி
  • இயக்கம்: கீர்த்தன் நடகௌடா
  • இசை: வெங்கி ஜிஜி
  • தயாரிப்பு வடிவமைப்பு: உல்லாஸ் ஹைதூர்
  • தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்

வெளியீடு: அக்டோபர் 23 மொழிகள்: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி

A Room Locked for 15 Years Holds a Terrifying Secret! Prashanth Neel Presents Horror Mystery Thriller ‘418’

The gripping horror thriller is set to hit theatres on October 23 in four languages!

A medical college hostel that has remained locked for 15 years, a mysterious Room No. 418, and secrets that defy scientific explanation — these intriguing elements form the foundation of ‘418’, an upcoming horror mystery thriller presented by acclaimed filmmaker Prashanth Neel. Blending suspense, superstition and unexplained paranormal occurrences, the film promises an engaging theatrical experience for horror enthusiasts.

Presented by Prashanth Neel, ‘418’ is produced by Ravi Shankar Yalamanchili and Naveen Yerneni under the banner of Mythri Movie Makers. Directed by Keerthan Nadagowda, the film is scheduled to release in theatres on October 23 in Tamil, Telugu, Kannada and Hindi.

The story revolves around the mystery surrounding a room in a medical college hostel that has remained locked for 15 years. As questions emerge about the incidents that took place inside the room, the narrative explores the unsettling intersection of science, superstition and unexplained supernatural events.

With its intriguing premise and suspense-driven narrative, ‘418’ aims to keep audiences guessing until the very end. The mystery surrounding the sealed room and the disturbing events awaiting those who dare to uncover its secrets form the central attraction of the film.

The film features Chaitra Achar, Charan Lakkaraju, Surya Raj Veerabadhrini, Preethi Pagadala, Shashank Patil and Sri Vaishnav in key roles.

Venky GG has composed the music, while Ullas Haidur is responsible for production design.

Mythri Movie Makers, known for producing films across diverse genres, continues to expand its cinematic offerings with ‘418’. Focusing on mystery, suspense and horror, the production house brings audiences a story designed to deliver an immersive big-screen experience.

Why has Room No. 418 remained locked for 15 years? What really happened inside it? And what awaits those who dare to uncover the truth?

Audiences can discover the answers when ‘418’ arrives in theatres on October 23.

Technical Crew

  • Presented by: Prashanth Neel
  • Producers: Ravi Shankar Yalamanchili and Naveen Yerneni
  • Director: Keerthan Nadagowda
  • Music Composer: Venky GG
  • Production Designer: Ullas Haidur
  • Production House: Mythri Movie Makers
  • Theatrical Release Date: October 23
  • Languages: Tamil, Telugu, Kannada and Hindi