
ஐயப்ப பக்தியின் பின்னணியில் ஆக்ஷன் விருந்து! வைபவின் ‘மணிகண்டா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – ரவிமோகன் வெளியிட்டார்!
கார்த்திகை மாதத்தில் திரைக்கு வரத் தயாராகும் ஆன்மீகத் திரைப்படம் – வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசர்!
ஐயப்ப பக்தர்களின் ஆன்மீகப் பயணத்தை மையமாகக் கொண்டு, பக்தியையும் ஆக்ஷனையும் இணைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘மணிகண்டா’. வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படம், அதன் வித்தியாசமான தலைப்பாலும் பிரம்மாண்டமான போஸ்டர் வடிவமைப்பாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இப்படம், தற்போது ‘மணிகண்டா’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் ‘மாளிகப்புரம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விஷ்ணு சசி சங்கர், இப்படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார்.
ஆன்மீகத்தையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கும் ஃபர்ஸ்ட் லுக்!
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நீல நிற ஆடையில் கையில் வேலுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் வைபவ். அவருக்குப் பின்னணியில் பிரம்மாண்டமான ஐயப்பன் சிலை, தங்க நிற ஒளிச்சிதறல்கள், நெருப்புச் சுடர்கள் எனப் போஸ்டர் முழுவதும் தெய்வீகமும் மர்மமும் கலந்த காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது. ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்ற வாசகம், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஐயப்ப பக்தர்களின் பயணம் – கதையின் மையம்!
மாலை அணிந்து விரதமிருந்து, கடினமான மலைப்பாதைகளைக் கடந்து ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு ‘மணிகண்டா’ உருவாகியுள்ளது. பக்தி, இறைநம்பிக்கை, உணர்ச்சிகரமான தருணங்கள் ஆகியவற்றுடன் ஆக்ஷன் காட்சிகளும் பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்த படைப்பாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட கதையை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் திரையில் கொண்டு வரப் படக்குழு முயற்சி செய்துள்ளது.
தெய்வீக அம்சங்களையும் பிரம்மாண்டமான காட்சிகளையும் இணைக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வரும் நிலையில், ‘மணிகண்டா’வும் அந்த வரிசையில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நட்சத்திரப் பட்டாளத்துடன் தொழில்நுட்பக் குழுவும்!
தந்த்ரா ஃபிலிம்ஸ் சார்பில் ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். வைபவ் கதாநாயகனாக நடிக்க, மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பேரடி, அர்ஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு பிரேம் ஜி அமரன் இசையமைத்துள்ளார். யுவன் செல்வா ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். சூர்யா ராஜீவன் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஸ்டண்ட் சில்வா மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ஜே.கே. சரவணா மற்றும் ப்ருத்வி ஆதித்யா ஆகியோர் எழுத்துப் பணிகளில் இணைந்துள்ளனர்.
கார்த்திகை மாத வெளியீட்டுக்குத் திட்டம்!
‘மணிகண்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஐயப்ப பக்தர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, 2026ஆம் ஆண்டு கார்த்திகையில் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
படத்தின் டீசர், இசை வெளியீடு மற்றும் அடுத்தடுத்த விளம்பர நிகழ்வுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீகப் பின்னணியில் ஆக்ஷன் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களுடன் உருவாகியுள்ள ‘மணிகண்டா’, கார்த்திகை மாதத்தில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.

Ravi Mohan Unveils the First Look of Vaibhav’s ‘Manikanda’ – A Grand Blend of Spirituality and Action!
Directed by Vishnu Sasi Shankar and creatively produced by Venkat Prabhu, the film is targeting a release during the auspicious Karthigai month.
‘Manikanda’, an upcoming film starring Vaibhav, is set to bring together spirituality, devotion and action on the big screen. Produced by Tantra Films and directed by Vishnu Sasi Shankar, the film’s first-look poster was unveiled by actor Ravi Mohan. The striking poster has generated curiosity among audiences with its grand visual presentation and spiritual backdrop.
Previously titled ‘Tat Tvam Asi’, the film has now been renamed ‘Manikanda’. Director Vishnu Sasi Shankar, who earned recognition for his Malayalam film ‘Malikappuram’, is at the helm of this project, with acclaimed filmmaker Venkat Prabhu serving as its creative producer.
A First Look That Combines Spirituality and Grandeur
The newly released first-look poster features Vaibhav in a commanding appearance, dressed in blue and holding a vel in his hand. A magnificent idol of Lord Ayyappa forms the backdrop, surrounded by golden illumination and dramatic flames. The cosmic-inspired background and divine visual elements lend the poster a grand and distinctive appearance.
Accompanied by the tagline, “The Journey of God and His People,” the first look hints at a narrative rooted in faith, devotion and the spiritual journey of devotees.
The Spiritual Journey of Lord Ayyappa Devotees at Its Core
‘Manikanda’ revolves around the spiritual journey of Lord Ayyappa devotees who observe the traditional vratham, wear the sacred mala and undertake the challenging pilgrimage to seek the deity’s blessings.
Blending devotion and faith with action sequences and emotionally engaging moments, the film aims to offer a compelling cinematic experience for audiences across age groups. The makers have incorporated various entertainment elements while retaining the spiritual essence of the story.
With films featuring divine themes and grand visual storytelling attracting audience attention, ‘Manikanda’ is expected to generate interest among viewers looking forward to another spiritual action entertainer.
Vaibhav Leads an Ensemble Cast
Produced by J.K. Saravana and M. Rajaram under the Tantra Films banner, the film features Vaibhav in the lead role, with Meenakshi Govindarajan playing the female lead. Aravind Akash, Aadukalam Naren, Hareesh Peradi and Arjey are among the other actors playing important roles.
The film has music composed by Premgi Amaren, while Yuvan Selva handles the cinematography and Praveen K.L. is in charge of editing. Surya Rajeevan serves as the art director. The action sequences have been choreographed by Stunt Silva and Sakthi Saravanan.
Aditya Thangirala, Nandakumar Tamilselvan, J.K. Saravana and Pruthvi Adithya have contributed to the writing team. The technical team has worked towards bringing the film’s spiritual atmosphere and visually ambitious sequences to life.
‘Manikanda’ Targets a Karthigai Release
With filming completed, ‘Manikanda’ is currently progressing through its post-production stages. The makers are planning to release the film during Karthigai in 2026, an auspicious period associated with Lord Ayyappa and his devotees.
Further announcements regarding the teaser, audio launch and promotional activities are expected in the coming weeks.
Combining spirituality, devotion, action and emotional storytelling, ‘Manikanda’ is gearing up for a potential Karthigai release, with audiences eagerly awaiting more updates about the film.
