வைபவின் ‘மாறுவேஷம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்!
வைபவின் 'மாறுவேஷம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு... மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த புதிய துப்பறியும் திரில்லருக்கு தொடக்கம்!
சென்னை:
தமிழ் சினிமாவில் மர்டர் மிஸ்ட்ரி மற்றும் துப்பறியும் திரில்லர் கதைகளுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள 'மாறுவேஷம்' திரைப்படத்தின் முதல் பார்வை (First Look) போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களாக விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் இணைந்துள்ளனர்.
'மாறுவேஷம்' திரைப்படம் வழக்கமான குற்றப்பின்னணி கதையாக இல்லாமல், மர்மம், உளவியல் பரபரப்பு, திடீர் திருப்பங்கள் மற்றும் மனிதர்களின் மறைக்கப்பட்ட அடையாளங்களை மையமாகக் கொண்ட வித்தியாசமான த்ரில...
