Friday, November 6
Shadow

இந்திய தேசியக் கொடியின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்ற வருகிறது ‘ஃப்ளாக்’ திரைப்படம் – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

இந்திய தேசியக் கொடியின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்ற வருகிறது ‘ஃப்ளாக்’ திரைப்படம் – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியின் பெருமையையும், அதன் பின்னணியில் உள்ள உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃப்ளாக்’ (FLAG). ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரப்பிரகாஷ் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, இந்திய தேசியக் கொடியை மையக்கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கர் ஏற்றுள்ளார். படத்தொகுப்பை வரதராஜன் கவனிக்க, ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம் இணைந்து இசையமைத்துள்ளனர்.

‘இட்லி கடை’, ‘டோரதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள குட்டி தனுஷ் என அழைக்கப்படும் தீஹான் இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ‘தூம்’, ‘க்ரிஷ்’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்களான மிக்கி மக்கி ஜா மற்றும் அபினவ் கோசாமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், போஜ்புரி திரையுலகைச் சேர்ந்த அனந்த், வங்காளத்தைச் சேர்ந்த பப்புஷா உள்ளிட்ட கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். பல்வேறு மொழி மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

உலக நாடுகளின் தேசியக் கொடிகளுக்கும் சினிமா மூலம் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்!

படம் குறித்து தயாரிப்பாளர் வை. வைரப்பிரகாஷ் கூறுகையில், “ஃப்ளாக் திரைப்படம் எங்களுடைய நீண்ட நாள் கனவு. இந்தியாவின் மூவர்ணக் கொடியை மையமாகக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்திய தேசியக் கொடியின் பெருமையை உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதோடு, ஒவ்வொரு நாடும் தங்களுடைய தேசியக் கொடியின் பெருமையைப் போற்றும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.

ஒரு திரைப்படத்தின் வெற்றியோடு இந்த முயற்சி முடிந்துவிடக் கூடாது. உலகின் ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியையும் அந்தந்த நாட்டின் கலாச்சாரம், பெருமை மற்றும் அடையாளத்துடன் சினிமா வழியாக உலக மக்களிடம் அறிமுகப்படுத்தும் ஒரு சர்வதேச இயக்கத்தின் தொடக்கமாக ‘ஃப்ளாக்’ அமைய வேண்டும் என்பதே எங்களுடைய கனவு” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய தேசியக் கொடியின் பெருமையைத் திரைப்படம் வாயிலாக உலகிற்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் உருவாகியுள்ள ‘ஃப்ளாக்’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

‘FLAG’ Set for a Grand Theatrical Release on November 20; Aiming to Take the Pride of India’s Tricolour to the Global Stage!

‘FLAG’, an upcoming film centred on the pride and significance of India’s National Flag, is all set to hit theatres on November 20. Produced by V. Vairaprakash under the banner of I&I Movies, the film aims to go beyond conventional storytelling with a unique concept inspired by the Indian Tricolour.

Director S.P. Pon Shankar has taken charge of the story, screenplay, dialogues, cinematography and direction. The film’s editing is handled by Varadarajan, while Raja Ravivarma and Balasubramaniam have jointly composed the music.

The film features ‘Kutty Dhanush’ Dhehan, known for his performances in films such as Idli Kadai and Dorothy, in a prominent role. Bollywood actors Mickey Makhija and Abhinav Goswami, who have been part of films such as Dhoom, Krrish and Sardar, also play pivotal characters.

The cast further includes Bhojpuri actor Ananth, Bengali actor Pappusha, along with several artistes from Kerala and Karnataka. Bringing together performers from different regions of the country, the film represents a diverse cinematic collaboration.

‘FLAG’ Producer V. Vairaprakash Shares His Global Vision

Speaking about the film, producer V. Vairaprakash said, “This film is our dream project! With India’s Tricolour as its central theme, we hope FLAG will become the seed for a new international cinematic initiative, inspiring countries across the world to make films that celebrate and honour their respective national flags.

This is not just about the success of a film. It is about initiating a global movement through cinema, introducing the national flags of every country to audiences across the world and celebrating the pride and identity associated with each one.”

With an ambitious vision of taking the significance of India’s National Flag to an international audience, ‘FLAG’ is gearing up for its theatrical release on November 20.