
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் முக்கியமானவர் நடிகை ஆர்த்தி.இவர் வைகைப்புயல் வடிவேலு, கோவை சரளா, மயில்சாமி போன்ற நட்சத்திரங்களின் கூட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழகத்தில் அதிக அளவில் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார்.நடிகை ஆர்த்தி தலயின் தீவிர ரசிகை என்பது அனைவரும் அறிந்ததே.
நடிகை ஆர்த்தி தற்போது தன் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.இந்த செய்தியை இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த செய்தியை அறிந்த நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உடல் உறுப்பு தானம் செய்வது சினிமா பிரபலங்களில் முதன்முதலில் செய்தது உலகநாயகன் கமல்ஹாசன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்வதும் பலநேரம் பாடுபடுத்துவதாகவே ஒரு கட்டத்திற்கு மேல் தோன்றும்
