Tuesday, April 28
Shadow

என்ன ஆனது விசுவாசம் ஏன் தாமதம் காரணம் சொல்ல தவிக்கும் பட குழு

தல அஜித்தின் விசுவாசம் படபிடிப்பு இப்ப அப்போ என்று தள்ளி கொண்டேபோகிறது காரணம் என்ன எதனால் இப்படி போகிறது ஜனவரி போய் பிப்ரவரி முடிந்து மார்ச் மாதமும் வந்துவிட்டது. நட்சத்திர தேர்வு முடிந்துவிட்டது பின்ன எதுக்கு தாமதம் என்று ரசிகளுக்குள் ஒரு கேள்வி.

இதற்கு பல காரணம் சொன்னாலும் ஒரு சிலர் தயாரிப்பாளருக்கும் சிவாவிற்குமே மோதல், அதனால் தான் படம் தொடங்கவில்லை என்று கூறுகின்றனர்.

மேலும், அஜித் சிவாவிற்கு முழு ஆதரவு தர, தயாரிப்பாளர் தரப்பு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருவதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே விவேகம் படுதோல்வியை சந்திக்க, இயக்குனரை மாற்றலாம் என சத்யஜோதி நிறுவனம் ஆரம்பத்திலேயே கூறியதாகவும், அதற்கு அஜித் மறுத்ததாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

இதனால் விசுவாசம் நின்று விடுமோ என்ற எண்ணம் பலருக்கும் வரத்தொடங்கியுள்ளது, சிவா அல்லது சத்யஜோதி நிறுவனம் சொன்னாலே உண்மை வெளிவரும்.

உங்கள் பிரச்னை எதுவோ அதை பேசி தீர்த்து கொள்ளுங்கள் எங்களுக்கு தல படம் தீபாவளிக்கு வேண்டும் என்று சொல்லும் ரசிகர்கள் நியாமான கோரிக்கை ரசிகர்களை நினைத்து விரைவில் படத்தை ஆரம்பியுங்கள்