
கேரள மாநிலம், கோழிக்கோடில் பிறந்த வின்சென்ட் 1960 காலகட்டத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர். இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 70க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தமிழில், அமர தீபம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

தொடர்ந்து உத்தம புத்திரன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, கவுரவம், வசந்த மாளிகை, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை என ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீதர் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். அதோடு 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும் உள்ளார் வின்சென்ட். இந்தியில், இவர் ஒளிப்பதிவு செய்த பிரேம் நகர் என்ற படத்திற்காக பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார்.

1997-ம் ஆண்டு அன்னமய்யா தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததோடு, தனது ஓய்வை அறிவித்தார். பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஜெயனன் வின்சென்ட் மற்றும் அஜயன் வின்சென்ட் இவரது மகன்களாவர். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வின்சென்ட் தனது 86 வயதில் இன்று காலமானார்.

இவர் ஒளிப்பதிவு செய்த சில திரைப்படங்கள்:
அமரதீபம், உத்தம புத்திரன், எங்க வீட்டுப் பிள்ளை, அடிமைப்பெண், கல்யாணப் பரிசு, விடிவெள்ளி, தேன் நிலவு, கௌரவம், வசந்த மாளிகை, போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை, காதலிக்க நேரமில்லை, பிரேம் நகர், அன்னமய்யா.
