
திரைப்பட இயக்குனரான இவரது தந்தை ஏ. அழகப்பன் தயாரிப்பாளர் மற்றும் கவுன்சில் தலைவர் ஆவார். இவருக்கு உதயா என்ற சகோதரும் உண்டு. அவரும் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார்.
இவர் இந்திய திரைப்படத் துறையில் பிரபல இயக்குநர். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ளார். அதன் மூலம் 2009ஆம் ஆண்டு சிறந்த கார்ப்பரேட் விளம்பர விருதை வென்றார்.
கடந்த 2007ம் ஆண்டு அஜித் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் என்ற திரைப்படத்தில் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். கடந்த 2008ஆம் ஆண்டு பொய் சொல்லப் போறோம் என்ற நகைச்சுவைத் திரைப்படத்தை இயக்குனர். கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்யா மற்றும் ஏமி சாக்சன் நடித்த மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் ஆனார். கடந்த 2011ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, அமலா பால் மற்றும் சாரா அர்ஜுன் நடித்த தெய்வத்திருமகள் திரைப்படத்தையும், கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடித்த தலைவா என்ற திரைப்படத்தை இயக்கினார்.

கடந்த 2014 ல் இயக்குனர் விஜய் – நடிகை அமலா பால் திருமணம் நடந்தது. இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இவர் இயக்கிய திரைப்படங்கள்
நடிகர் பிரபுதேவா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் லட்சுமி, நடிகை சாய்பல்லவி நடிப்பில் தியா, நடிகர் பிரபுதேவா, தம்மன்னா நடிப்பில் வெளியான தேவி, நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமக்ன், கடந்த 1989ல் ஆண்டில் மலையாளம் கிரீடம் ரீமேக், தமிழில் கிரீடம் என்ற பெயரில் வெளியான இந்த படத்தில் நடிகர் அஜித் குமார், நடிகை திரிஷா கிருஷ்ணன் ஆகியோர் நடித்தனர். இந்தி வெளியான “கோஸ்லா கா கோஸ்லா” படத்தின் ரீமேக், தமிழில் ” பொய் சொல்ல போறோம்” வெளியானது. இதில் நடிகர் கார்த்திக் குமார், நடிகை பியா பஜ்பை ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2010ல் நடிகர் ஆர்யா, நடிகை ஏமி சாக்சன் நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

கடந்த 2011ல் விக்ரம், சாரா அர்ஜுன், அனுஷ்கா ஷெட்டி, அமலா பால் ஆகியோர் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படமும் பிலிம்பேர் சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு பரிந்துரை, செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2012ல் நடிகர்கள் விக்ரம், அனுஷ்கா ஷெட்டி, ஏமி சாக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான தாண்டவம் திரைப்படம், கடந்த 2013ல் விஜய், அமலா பால் நடிப்பில் வெளியான தலைவா திரைப்படம், கடந்த 2014ல் நடிகர் நாசர், சாரா அர்ஜுன், பாட்ஷா, ரே பால் மனோஜ், சண்முகராஜன் ஆகியோர் நடிப்பில் வெளியான சைவம் திரைப்படம், கடந்த 2015ல் நடிகர்கள் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ், காவ்யா ஷெட்டிஆகியோர் நடிப்பில் இது என்ன மாயம் திரைப்படம்.
இதுமட்டுமின்றி கடந்த 2015ம் ஆண்டில் வெளியான “ஒரு நாள் இரவில்” என்ற படத்தில் இவர் தயாரிப்பாளராக இருந்துள்ளார்.
